» சினிமா » செய்திகள்

பவர் ரேஞ்சர் புகழ் நடிகர் ஜேசன் டேவிட் ஃபிராங்க் காலமானார்

திங்கள் 21, நவம்பர் 2022 4:13:11 PM (IST)பவர் ரேஞ்சர்ஸ் புகழ் நடிகர் ஜேசன் டேவிட் ஃபிராங்க் காலமானார். அவருக்கு வயது 49.

அமெரிக்காவில் 1973-ல் பிறந்தவர் ஃபிராங்க். 1993 முதல் 1996 வரை மைட்டி மார்பின் பவர் ரேஞ்சர்ஸ் தொலைக்காட்சித் தொடரில் கிரீன் பவர் ரேஞ்சர் டாமி ஆலிவராக நடித்தார் ஃபிராங்க். இந்தத் தொடர் இளைஞர்களிடம் மிகவும் புகழ்பெற்றது. முதலில் கிரீன் ரேஞ்சராக நடித்தார் ஃபிராங்க். இந்தக் கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் பெரியளவில் ஆதரவு அளித்ததால் ஒயிட் ரேஞ்சராகவும் குழுவின் தலைவராகவும் மாற்றப்பட்டார். 

அந்தத் தொடரில் மொத்தமாக 123 எபிசோட்களில் அவர் நடித்தார். ஃபிராங்க், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஃபிராங்குக்கு முதல் திருமணத்தில் மூன்று குழந்தைகளும் 2-வது திருமணத்தில் ஒரு குழந்தையும் உள்ளார்கள்.  இந்நிலையில் ஃபிராங்க் மறைந்து விட்டதாக அவருடைய மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார். அவர் எப்போது, எதனால் இறந்தார் என்கிற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஃபிராங்கின் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Nalam PasumaiyagamBlack Forest Cakes
Thoothukudi Business Directory