» சினிமா » செய்திகள்

உதயநிதி நடித்துள்ள கலகத் தலைவன் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

வெள்ளி 18, நவம்பர் 2022 3:41:28 PM (IST)உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள "கலகத் தலைவன்” படத்தை பார்த்து ரசித்துள்ளார் அவரின் தந்தையும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின்.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ள திரைப்படம் "கலகத் தலைவன்”. இப்படம் நாளை வெளியாகிறது. இதில் நிதி அகர்வால், கலையரசன், ஆரவ் உட்பட பலர்நடித்துள்ளனர். அரோல் கரோலி இசை அமைத்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா பின்னணி இசை அமைத்துள்ளார். தில் ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். மதன் கார்க்கி, பிரியன்பாடல்கள் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "கலகத் தலைவன்” திரைப்படத்தை படக்குழுவினருடன் இணைந்து, தனியார் திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளார். படத்தை பார்த்த பின் சமூக அக்கறையுடன் நேர்த்தியான படைப்பை உருவாக்கியிருப்பதற்காக உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored AdsThoothukudi Business Directory