» சினிமா » செய்திகள்
23 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் இளையராஜா - ராமராஜன் கூட்டணி
வெள்ளி 11, நவம்பர் 2022 5:48:11 PM (IST)

சுமார் 23 வருடங்களுக்குப் பிறகு ‘சாமானியன்’ படத்திற்காக இளையராஜா- ராமராஜன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.
தமிழ் சினிமாவில் எண்பதுகளின் காலக்கட்டத்தில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் நடிகர் ராமராஜன். சிறிது காலம் சினிமாவை விட்டு விலகி இருந்தவர் தற்போது ‘சாமானியன்’ படம் மூலமாக கம்பேக் கொடுக்கிறார். இந்தப் படம் குறித்தான அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. நடிகர்கள் ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர். 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்த நிலையில், ‘சாமானியன்’ படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். ராமராஜனின் ‘கரகாட்டக்காரன்’, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படங்களின் பாடல்களும் இப்போது வரைக்கும் ரசிகர்களுக்குப் பிடித்தப் பாடல்களாக அமைந்துள்ளன. கிட்டத்தட்ட 23 வருடங்களுக்குப் பிறகு ‘சாமானியன்’ படத்திற்காக இளையராஜா- ராமராஜன் கூட்டணி ஒன்றிணைந்து இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து படத்தின் இயக்குநர் ஆர்.ராகேஷ் இந்தச் சந்திப்பு பற்றி கூறும்போது, "சாமானியன் என்கிற இந்த கதைக்கு மிகப் பொருத்தமானவராக மனதில் தோன்றிய முதல் நடிகர் ராமராஜன் தான். படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. ராமராஜன், ராதாரவி, எம்.எஸ் பாஸ்கர் மூவரும் போட்டி போட்டு நடிக்கும் காட்சிகளை இயக்குவது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். மிக முக்கியமாக, பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒரு அருமையான பாடலை எழுதியுள்ளார். கவிஞர் சினேகனும் அழகான பாடல் ஒன்றைக் கொடுத்துள்ளார். தற்போது இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க ஒப்புக்கொண்டது இந்த படத்திற்கான மதிப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாரி செல்வராஜின் ‘பைசன் காளமாடன்’ படப்பிடிப்பு நிறைவு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:53:30 PM (IST)

காதலர் தினம் கொண்டாடிய திரை நட்சத்திரங்கள்
சனி 15, பிப்ரவரி 2025 3:36:49 PM (IST)

ரஜினிகாந்த் ஒரு நல்ல நடிகரா?- ராம்கோபால் வர்மா சர்ச்சை பேச்சு
வியாழன் 13, பிப்ரவரி 2025 5:35:59 PM (IST)

விஜய் மீது முட்டையை வீச திட்டம் : ரசிகர்களுக்கு ரஜினி கண்டனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 5:54:19 PM (IST)

விடாமுயற்சி ரிலீஸ் : அஜித் ரசிகர்கள் உற்சாகம்!
வியாழன் 6, பிப்ரவரி 2025 3:25:22 PM (IST)

சர்வதேச திரைப்பட விழாவில் ராமின் பறந்து போ!
வெள்ளி 31, ஜனவரி 2025 5:27:44 PM (IST)
