» சினிமா » செய்திகள்
ரசிகர்கள் ரசனை மாறிவிட்டது: பாலிவுட் படங்கள் தோல்வி குறித்து மாதவன் விளக்கம்
வியாழன் 18, ஆகஸ்ட் 2022 4:20:31 PM (IST)
பாலிவுட் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவது குறித்து நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் , நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாக உள்ள ‘தோகா: ரவுண்ட் டி கார்னர்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மாதவனிடம் ‘பாலிவுட் படங்களின் தொடர் தோல்விக்கு என்ன காரணம்’? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மாதவன், "சினிமாவில் அனைத்து நடிகர்களும் முழுமையான உழைப்பைச் செலுத்துகின்றனர்.
கரோனாவிற்குப் பின்பு உலகளவிலான படங்களையும் ரசிகர்கள் பார்க்கத் துவங்கிவிட்டதால் அவர்களின் ரசனையும் மாறிவிட்டது. தென்னிந்தியப் படங்கள் பாலிவுட்டில் பெரிதாக வெற்றி பெறுவதில்லை. இந்த நிலைமை நிரந்தரம் அல்ல. நல்ல திரைப்படங்களை எடுத்தால் மக்கள் கண்டிப்பாக திரையரங்கம் வருவார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

த்ரிஷாவிடம் மன்னிப்பு கோரினார் மன்சூர் அலிகான்!
வெள்ளி 24, நவம்பர் 2023 12:26:43 PM (IST)

கங்குவா படப்பிடிப்பில் விபத்து: நடிகர் சூர்யா காயம்?
வியாழன் 23, நவம்பர் 2023 4:35:22 PM (IST)

21 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே படப்பிடிப்பு தளத்தில் ரஜினி, கமல்: வைரல் புகைப்படங்கள்
வியாழன் 23, நவம்பர் 2023 4:06:52 PM (IST)

டி.டி.எப். வாசனின் யூடியூப் சேனலை முடக்க நோட்டீஸ்!
திங்கள் 20, நவம்பர் 2023 4:44:03 PM (IST)

நடிகை த்ரிஷா குறித்து அவதூறு: மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு!
திங்கள் 20, நவம்பர் 2023 3:35:56 PM (IST)

மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை : குஷ்பு உறுதி
திங்கள் 20, நவம்பர் 2023 11:40:03 AM (IST)
