» சினிமா » செய்திகள்
நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது : நடிகர் சூரி விளக்கம்
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 12:34:41 PM (IST)
"விருமன் பட விழாவில், கோவில் குறித்து தவறாக எதுவும் பேசவில்லை" என நடிகர் சூரி விளக்கம் அளித்துள்ளார்.
கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சூரி, "ஆயிரம் கோவில் கட்டுவதைவிட, அன்ன சத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என பேசினார். அதற்கு சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் விருமன் படத்தின் சென்னை செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூரி, மதுரையில் தான் பேசிய பேச்சுக்கு விளக்கமளித்தார். அதில் "நான் எப்போதும் மீனாட்சி அம்மனை குறிப்பிட்டுதான் பேசுவேன். எனக்கு மீனாட்சி அம்மன் மிகவும் பிடிக்கும். நான் நடத்தும் ஹோட்டல்களுக்கு அம்மன் பெயர் வைத்துள்ளேன். என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது. நான் படிக்காதவன், கல்வியின் முக்கியத்துவம் எனக்கு தெரியும் என கூறினார்.