» சினிமா » செய்திகள்

மீண்டும் கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்: ரஜினி வாழ்த்து

வியாழன் 23, ஜூன் 2022 12:28:37 PM (IST)

நண்பர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று  ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகரும் தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரத்த ஓட்டம் சீராக இல்லாத காரணத்தால் வலது கால் விரல் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தே.மு.தி.க. வெளியிட்ட அறிக்கையில், நீண்ட ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் டாக்டரின் ஆலோசனைப்படி விரல் அகற்றப்பட்டது. 

மருத்துவர்களின் கண்காணிப்பில் தற்போது அவர் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam




Black Forest Cakes



Thoothukudi Business Directory