» சினிமா » செய்திகள்

விஜய் பிறந்த நாள்: வாரிசு படத்தின் போஸ்டர் வெளியீடு!

புதன் 22, ஜூன் 2022 3:46:10 PM (IST)நடிகர் விஜயின் பிறந்தநாளை ஒட்டி அவரது அடுத்த திரைப்படமான ’வாரிசு’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.

வம்சியுடன் விஜய் இணையும் 'விஜய் 66' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு 'வாரிசு' என பெயரிடப்பட்டுள்ளது. தில் ராஜு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜயின் பிறந்த நாளையொட்டி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வாரிசு படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்போஸ்டருக்கு ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் மூன்றாவது லுக் போஸ்டரை இன்று மாலை வெளியிட இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Thoothukudi Business Directory