» சினிமா » திரை விமர்சனம்

ரஜினியின் பேட்ட.. ரசிகர்களுக்கு வேட்ட!

செவ்வாய் 12, பிப்ரவரி 2019 1:25:05 PM (IST)பழைய பகையை தீர்த்துக் கட்ட நாயகன் நிகழ்காலத்தில் எடுக்கும் முயற்சிகள் தான் கதையின் களம். ஏற்கனவே தமிழ் சினிமாவிற்கு ரொம்பவே பழக்கப்பட்ட கதைதான் என்றாலும், ரஜினி இதில் நடித்திருக்கும் போது ரசிக்க வைக்கிறது.

அமைச்சரின் சிபாரிசுடன் ஒரு கல்லூரியின் விடுதி வார்டனாக பணியில் சேர்கிறார் ரஜினி. அங்கு சீனியர் மாணவரான பாபி சிம்ஹா, ஜூனியர் மாணவர்களை ராக்கிங் செய்து அடாவடி யில் ஈடுபடுகிறார். தன் தந்தை ஆடு களம் நரேனுடன் சேர்ந்து விடுதி உணவு கான்ட்ராக்ட் விடுவதிலும் குளறுபடி செய் கிறார். இதை தட்டிக்கேட்க இறங்கும் ரஜினிக்கும், பாபி சிம்ஹாவுக்கும் மோதல் வெடிக்கிறது. இதற்கி டையே, அந்த கல்லூரி மாணவரை தீர்த்துக்கட்ட உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஒரு கும்பல் வருகிறது. இந்த இரு ரவுடி கும்பல்களையும் ரஜினி ஒரே நேரத்தில் கல் லூரி வளாகத்தில் எதிர் கொண்டு துவம்சம் செய்கிறார்.

ஒரு மாணவனை தேடிக் கொண்டு உ.பி.யில் இருந்து எதற்காக ஒரு கும்பல் வர வேண்டும்? அவர்கள் யார்? அவர்களுடன் ரஜினி ஏன் மோதுகிறார்? பாபிசிம்ஹா உடனான பிரச்சினை என்ன ஆனது? முடிவில் வெல்வது யார்? இதற்கெல்லாம் பதில் சொல்கிறது பேட்ட.

கல்லூரி மாணவர்களுக்கு இணை யாக உற்சாகம், இளமை பொங்க சுறுசுறுப்பாக ஓடியாடி வருகிறார் ரஜினி. மாணவர்களின் ஒழுங்கீனங்களை சரிசெய்வது, அவ்வப்போது சிம்ரனுடன் ரொமான்ஸ் செய்வது, முனிஸ் காந்தை கலாய்ப்பது, வில்லன் வீட்டுக்கே சென்று அவரை கூலாக எதிர்கொள்வது என முதல் பாதியில் ஒவ்வொரு ஃபிரேமிலும் கவர்கிறார். கவர்ச்சியான ஸ்டைல், போகிற போக்கில் செய்யும் காமெடி, இளமை யான உடல்மொழி என காட்சிக்கு காட்சி மரண மாஸ் காட்டுகிறார். சமீபகாலமாக, பழைய ரஜினியை ஃபீல் பண்ண முடியவில்லை என்று வருந்திய ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.

ஆனால், இப்படி ஸ்கோர் செய்யும் ரஜினி யையும், அவரைச் சுற்றி சுழலும் கதையையும் 2-ம் பாதியில் இன்னும் மெருகேற்ற இயக்குநர் தவறிவிட்டார். ரஜினி - சசிகுமார் நட்பின் பின்னணியாக விரியும் 2-ம் பாதி திரைக்கதை, அதில் வரும் குடும்ப சென்டிமென்ட் ஆகியவற்றில் புதுமை இல்லை. பழிவாங்கலுக்காக காட்டப்படும் காட்சிகள், போகிற போக்கிலேயே சொல்லப்படுகின்றன.

நவாஸுதீன் சித்திக்கி பெரிய வில் லன் என்பதை நியாயப்படுத்தும் காட்சிகளும் இல்லை. பாட்ஷா 2 வரணும். அல்லது பாட்ஷா மாதி ரியே ஒரு படத்துல ரஜினி மீண்டும் நடிக்கணும் என்பது ரஜினி ரசிகர்களின் ஆசைதான். அதை மனதில் வைத்து ஒரு ரஜினி ரசிகனாக திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர். அதற்காக, பாட்ஷாவையே உல்டா செய்திருக்க வேண்டாம். தவிர, பாட்ஷாவின் பெரும் பலம், ரகுவரனும்கூட. இதில் பிரதான வில்லன் பல இடங்களில் பலவீனமாக காட்சியளிக்கிறார்.

மற்றபடி 80-களின் பாடல்களை வானொலி வழியே பரவவிடுவது, மணல்கொள்ளை பற்றி பேசும் இடங்கள், விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் ஒரு கட்டத்தில் பிரதிபலிக் கும் சஸ்பென்ஸ் உள்ளிட்ட இடங்களில் இயக்கு நரின் தனித் திறமை வெளிப்படுகிறது. நல்லா இல் லேன்னா கேள்வி கேக்கணும்; இல்ல நாமளே இறங்கி மாத்தணும் என்பது போன்ற வசனங்களில் ரஜினி ரசிகர்களின் அரசியல் ஏக்கங்களுக்கும் தீனி போடுகிறார் இயக்குநர்.

நாயகிகளாக வரும் சிம்ரன், த்ரிஷா இருவருக்கும் நடிப்பதற்கு பெரிதாக வேலையில்லை என்றாலும் கதையின் ஓட்டத்துக்கு துணை நிற்கிறார்கள். அதிலும் சிம்ரனின் நடனமும், இளமைத் தோற்றமும் பாராட்டும்படி இருக்கிறது. வில்லனின் மகனாக வரும் விஜய் சேதுபதி கச்சிதமான நடிப்பு. இயக்குநர் மகேந்திரன், ஆடுகளம் நரேன், மேகா ஆகாஷ், முனிஸ்காந்த், குரு சோமசுந்தரம் எனப் பலரும் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை உணர்ந்து நடித் துள்ளனர்.

டார்ஜிலிங், டேராடூன் மலைப் பின்னணியாகட்டும், நெருக்கடியான உத்தரப் பிரதேச நகரத்தின் பர பரப்பாகட்டும்.. மிக நேர்த்தியாக, அழகாக படம் பிடித்திருக்கிறார், தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திருநாவுக்கரசு. பின்னணி இசையில் படத்தின் கதைக்கு பொருத்தமாகவும், பாடல் இசையில் ரசிகர்களை கொண்டாடவும் செய்திருக்கிறார் அனிருத். எத்தன சந்தோஷம், மரண பாஸ் ஆகிய இரு பாடல் களிலும் தெறிக்க விட்டிருக்கிறார். இளமை ததும்பும் ரஜினியை பழைய மாஸ் அவதாரத்தில் ரசிக்க வைத் ததில் இசைக்கும், ஒளிப்பதிவுக்கும் பெரும் பங்கு உண்டு.

மொத்தத்தில் ரஜினியின் பேட்ட.. ரசிகர்களுக்கு வேட்ட!


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Thoothukudi Business Directory