» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
டி20 உலக சாம்பியன் இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது அயர்லாந்து அணி!
சனி 27, ஜூன் 2026 5:27:38 PM (IST)

அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில், நடப்பு டி20 உலக சாம்பியனான இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கிரிக்கெட் வரலாற்றில் எந்தவொரு சர்வதேச வடிவத்திலும் இந்திய அணிக்கு எதிராக அயர்லாந்து பெறும் முதல் வரலாற்று வெற்றி இதுவாகும். இறுதிவரை பதற்றமின்றி சிறப்பாக செயல்பட்ட அயர்லாந்து அணி, இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
பெல்ஃபாஸ்ட் நகரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி களம் இறங்கிய அயர்லாந்து அணி, இந்தியப் பந்துவீச்சாளர்களின் பாய்ச்சலில் 30 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் லோர்கன் டக்கர் (அரைசதம்) மற்றும் கரேத் டெலானி (49 ரன்கள்) ஆகியோர் அணியை மீட்டெடுத்தனர். குறிப்பாக, ஆட்டத்தின் 16 மற்றும் 17-ஆவது ஓவர்களில் அயர்லாந்து பேட்டர்கள் ருத்ரதாண்டவம் ஆடி வெறும் இரண்டு ஓவர்களில் 46 ரன்களைக் குவித்தனர்.
இதனால், 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் என்ற வலுவான இலக்கை எட்டியது. இந்தியத் தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்குத் தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. இந்த ஆண்டு உலகக்கோப்பை வென்ற தொடக்க ஜோடியையே இந்தியா இப்போட்டியிலும் களமிறக்கியது. இதனால் முதன்முறையாக இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டிருந்த வைபவ் சூர்யவன்ஷிக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அபிஷேக் சர்மா மட்டும் தனி ஆளாகப் போராடி 20 பந்துகளில் 49 ரன்கள் குவித்தாரே தவிர, மற்ற நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அயர்லாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய இந்திய அணி, 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்களுக்கு சுருண்டது. அயர்லாந்து தரப்பில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மேத்யூ ஹம்ப்ரிஸ் மற்றும் மேட் ஹாலார்ட் தலா 3 விக்கெட்டுகளைச் சாய்த்தனர். அறிமுகப் போட்டியிலேயே அசத்திய ஜெய் முன்ட்ரா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இவ்விரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டி20 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜின்கியா ரஹானே ஓய்வு: வீடியோ வெளியிட்டு உருக்கம்!
வியாழன் 30, ஜூலை 2026 4:44:14 PM (IST)

காமன்வெல்த் போட்டி 2026: இந்திய வீரர்கள் சாதனை!
புதன் 29, ஜூலை 2026 11:18:45 AM (IST)

இலங்கை டெஸ்ட் தொடர்: ஷுப்மன் கில் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:46:27 PM (IST)

வைபவ் சூர்யவன்ஷி அபாரம்: ஜிம்பாப்வேயை 3-0 என வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
திங்கள் 27, ஜூலை 2026 4:59:28 PM (IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: நேரடியாகக் காலிறுதியில் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான்!
சனி 25, ஜூலை 2026 5:39:24 PM (IST)








