» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மகளிர் டி20 உலகக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா!
வெள்ளி 26, ஜூன் 2026 11:16:43 AM (IST)

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கோப்பை குரூப் சுற்று ஆட்டத்தில், வங்கதேச அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜூவாரியா 33 ரன்களும், நிகர் சுல்தானா 32 ரன்களும் சேர்த்தனர்.
137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில், தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷெபாலி வர்மா மற்றும் யாஸ்திகா பாட்டியா ஜோடி 45 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. அதிரடியாக விளையாடிய ஷெபாலி வர்மா 34 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து யாஸ்திகா 23 ரன்களிலும், ரிச்சா கோஷ் 10 ரன்களிலும் வெளியேறினர். பின்னர் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருடன் இணைந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி 16.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டத்தின் முடிவில் ஹர்மன்பிரீத் 13 ரன்களுடனும், தீப்தி சர்மா 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
அரையிறுதி வாய்ப்பு எப்படி?
குரூப்-ஏ பிரிவில் உள்ள இந்திய அணி, இதுவரை விளையாடியுள்ள 4 ஆட்டங்களில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகளைப் பெற்று, ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென் ஆப்பிரிக்கா 6 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்தியா தனது அடுத்த முக்கிய ஆட்டத்தில் வரும் ஜூன் 28ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜின்கியா ரஹானே ஓய்வு: வீடியோ வெளியிட்டு உருக்கம்!
வியாழன் 30, ஜூலை 2026 4:44:14 PM (IST)

காமன்வெல்த் போட்டி 2026: இந்திய வீரர்கள் சாதனை!
புதன் 29, ஜூலை 2026 11:18:45 AM (IST)

இலங்கை டெஸ்ட் தொடர்: ஷுப்மன் கில் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:46:27 PM (IST)

வைபவ் சூர்யவன்ஷி அபாரம்: ஜிம்பாப்வேயை 3-0 என வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
திங்கள் 27, ஜூலை 2026 4:59:28 PM (IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: நேரடியாகக் காலிறுதியில் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான்!
சனி 25, ஜூலை 2026 5:39:24 PM (IST)








