» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
கோடை வெயிலைத் தவிர்க்க புதிய திட்டம்: ஐபிஎல் கால அட்டவணையை மாற்றுகிறது பிசிசிஐ!
வியாழன் 18, ஜூன் 2026 12:15:59 PM (IST)
இந்தியாவில் நிலவும் கடுமையான கோடை வெயிலின் தாக்கம் மற்றும் மே மாத இறுதியில் தொடங்கும் முன்கூட்டிய பருவமழைப் பொழிவிலிருந்து வீரர்களையும், ரசிகர்களையும் பாதுகாக்கும் வகையில், அடுத்த ஆண்டு (2027) முதல் ஐபிஎல் தொடரை மார்ச் மாதத்தின் மத்தியில் தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சய்கியா அளித்துள்ள பிரத்யேக பேட்டியில், நடப்பு 2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரானது மார்ச் 28 முதல் மே 31 வரை நடைபெற்றது. இதில் மே 15ஆம் தேதிக்குப் பிந்தைய போட்டிகளின் போது நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெயில் அலையின் தாக்கமும், சில இடங்களில் முன்கூட்டியே பருவமழை தொடங்கும் சூழலும் காணப்பட்டது. இது மைதானத்திற்கு வரும் ரசிகர்களுக்கும், விளையாடும் வீரர்களின் உடல்நிலைக்கும் உகந்ததாக இல்லை.
இதன் காரணமாக, அடுத்த ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளை இரண்டு வாரங்களுக்கு முன்பாக, அதாவது மார்ச் 10ஆம் தேதியே தொடங்கி, மே 15ஆம் தேதிக்குள் இறுதிப்போட்டியை நடத்தி முடிக்கப் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் புதிய விளையாட்டுச் சாளரத்தை (Window) ஆய்வு செய்யப் போட்டி மேம்பாட்டுப் பொது மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கால அட்டவணை மற்றும் வெளிநாட்டு வீரர்களின் பங்களிப்பு ஆகியவற்றை நெறிப்படுத்த வேண்டியிருப்பதால், போட்டிகளின் எண்ணிக்கை 74 என்ற அளவிலேயே நீடிக்கும் என்றும், அதனை 94 ஆக உயர்த்தும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்றும் பிசிசிஐ தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜின்கியா ரஹானே ஓய்வு: வீடியோ வெளியிட்டு உருக்கம்!
வியாழன் 30, ஜூலை 2026 4:44:14 PM (IST)

காமன்வெல்த் போட்டி 2026: இந்திய வீரர்கள் சாதனை!
புதன் 29, ஜூலை 2026 11:18:45 AM (IST)

இலங்கை டெஸ்ட் தொடர்: ஷுப்மன் கில் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:46:27 PM (IST)

வைபவ் சூர்யவன்ஷி அபாரம்: ஜிம்பாப்வேயை 3-0 என வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
திங்கள் 27, ஜூலை 2026 4:59:28 PM (IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: நேரடியாகக் காலிறுதியில் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான்!
சனி 25, ஜூலை 2026 5:39:24 PM (IST)








