» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மாநில சீனியர் ஹாக்கி: நெல்லை, கோவை அணிகள் வெளியேற்றம்!
புதன் 13, மே 2026 8:10:56 AM (IST)
கோவில்பட்டியில் நடைபெற்று வரும் மாநில சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி, சென்னை, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
வ.உ.சி. துறைமுக ஆணையக் கோப்பைக்கான இப்போட்டிகள் கோவில்பட்டி கிருஷ்ணா நகர் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டங்களின் முடிவுகள் வருமாறு:
சென்னை vs கோயம்புத்தூர்: முதல் காலிறுதியில் சென்னை அணி 8-0 என்ற கோல் கணக்கில் கோயம்புத்தூரை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
தூத்துக்குடி vs திருநெல்வேலி: இரண்டாவது ஆட்டத்தில் தூத்துக்குடி அணி 8-2 என்ற கோல் கணக்கில் திருநெல்வேலியை வீழ்த்தியது.
தஞ்சாவூர் vs விருதுநகர்: மூன்றாவது ஆட்டத்தில் தஞ்சாவூர் அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அரியலூர் vs மதுரை: நான்காவது ஆட்டத்தில் அரியலூர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் மதுரையை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
இன்றைய ஆட்டங்கள் (புதன்கிழமை): இன்று காலை 6 மணிக்குத் தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி மற்றும் சென்னை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்ட அணிகள் மோதுகின்றன.
அரையிறுதி ஆட்டங்களைத் தொடர்ந்து, இன்று மாலை 3 மற்றும் 4-ஆம் இடங்களுக்கான போட்டிகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து இத்தொடரின் மகுடத்தைச் சூடப்போகும் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி கோலாகலமாக நடைபெற உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜின்கியா ரஹானே ஓய்வு: வீடியோ வெளியிட்டு உருக்கம்!
வியாழன் 30, ஜூலை 2026 4:44:14 PM (IST)

காமன்வெல்த் போட்டி 2026: இந்திய வீரர்கள் சாதனை!
புதன் 29, ஜூலை 2026 11:18:45 AM (IST)

இலங்கை டெஸ்ட் தொடர்: ஷுப்மன் கில் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:46:27 PM (IST)

வைபவ் சூர்யவன்ஷி அபாரம்: ஜிம்பாப்வேயை 3-0 என வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
திங்கள் 27, ஜூலை 2026 4:59:28 PM (IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: நேரடியாகக் காலிறுதியில் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான்!
சனி 25, ஜூலை 2026 5:39:24 PM (IST)








