» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இ-சிகரெட் பயன்படுத்திய ரியான் பராக்கிற்கு அபராதம்: ஆர்.ஆர். அணி நிர்வாகத்திற்கும் பிசிசி ஐஎச்சரிக்கை!
வியாழன் 30, ஏப்ரல் 2026 4:14:41 PM (IST)

நடப்பு ஐபிஎல் தொடரில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்கிற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அபராதம் விதித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 40-வது லீக் போட்டி மொஹாலியில் உள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியின் போது, ராஜஸ்தான் அணியின் ஆடை மாற்றும் அறையில் (Dressing Room) கேப்டன் ரியான் பராக் மின்னணு சிகரெட் (E-Cigarette) புகைத்த காட்சிகள் நேரலையில் பதிவாகின.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தியாவில் 2019-ம் ஆண்டு முதல் இ-சிகரெட் பயன்பாடு சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐபிஎல் விதிகளின்படி மைதானத்தின் உட்பகுதிகளில் புகைபிடிப்பது கடுமையான விதிமீறலாகும்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய பிசிசிஐ, ரியான் பராக் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கு அபராதம் விதித்துள்ளது. போட்டியின் ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நன்னடத்தை விதிகளின் கீழ் அவருக்கு ஒரு புள்ளி குறைக்கப்பட்டுள்ளது.
அணி நிர்வாகத்திற்கு எச்சரிக்கை
ஐபிஎல் தொடரின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க, தவறு செய்த வீரர்கள் மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட அணி மற்றும் அதன் நிர்வாகிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான வழிகளை பிசிசிஐ ஆராய்ந்து வருகிறது. வீரர்களின் ஒழுக்கத்தை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அணி நிர்வாகத்திற்கும் உள்ளது என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ரிக்கெல்டனின் சதம் வீண் : 244 ரன்கள் இலக்கை விரட்டி மும்பையை வீழ்த்தியது ஐதராபாத்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 11:14:19 AM (IST)

டிரெஸ்ஸிங் ரூமில் அத்துமீறல்: ரியான் பராக் மீது பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை?
புதன் 29, ஏப்ரல் 2026 4:15:24 PM (IST)

பஞ்சாப் அணியின் வெற்றி நடைக்கு முற்றுப்புள்ளி: ராஜஸ்தான் ராயல்ஸ் அதிரடி வெற்றி!
புதன் 29, ஏப்ரல் 2026 11:15:28 AM (IST)

மும்பை டூ சென்னை: சிஎஸ்கே-வில் இணையும் மும்பை இளம் வீரர்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:53:23 AM (IST)

ஐபிஎல் வரலாற்றில் மோசமான ஸ்கோர்கள்: தப்பித்தது டெல்லி... முதலிடத்தில் ஆர்சிபி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:41:30 AM (IST)

கோலி, படிக்கல் அதிரடியில் பெங்களூரு வெற்றி: சாய் சுதர்சனின் சதம் வீணானது!
சனி 25, ஏப்ரல் 2026 10:54:02 AM (IST)









