» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சிஎஸ்கே அணிக்கு பெரும் இழப்பு: அதிரடி வீரர் ஆயுஷ் மத்ரே தொடரிலிருந்து விலகல்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 4:11:09 PM (IST)

ஐபிஎல் 2026 தொடரில் தொடர் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, மற்றொரு பேரிடியாக இளம் அதிரடி ஆட்டக்காரர் ஆயுஷ் மத்ரே காயம் காரணமாக விலகியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 18 அன்று ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, இரண்டாவது ரன் எடுக்க முயன்ற மத்ரேவிற்கு இடது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனையில் காயம் தீவிரமாக இருப்பதால், அவர் குணமடைய 6 முதல் 12 வாரங்கள் வரை ஆகும் எனத் தெரியவந்துள்ளது. இதனால் மீதமுள்ள போட்டிகளிலிருந்து அவர் அதிகாரப்பூர்வமாக விலகுவதாக சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த சீசனில் 177.87 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் இரண்டு அரைசதங்களுடன் சிஎஸ்கே அணியின் டாப் ஸ்கோரராகத் திகழ்ந்த மத்ரேவின் விலகல் மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே வேகப்பந்து வீச்சாளர்கள் கலீல் அகமது மற்றும் நேதன் எல்லிஸ் ஆகியோரை அணி இழந்துள்ள நிலையில், மத்ரேவின் விலகல் அணிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இக்கட்டான இச்சூழ்நிலையில், இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடாத மூத்த வீரர் எம்.எஸ். தோனி, தனது உடற்தகுதிக்கு ஏற்ப மீண்டும் ஆடும் லெவனில் இணைய அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. சிஎஸ்கே தனது அடுத்த போட்டியில் ஏப்ரல் 23 அன்று மும்பை இந்தியன்ஸை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காமன்வெல்த் விளையாட்டு: மும்முறை தாண்டுதல் பிரிவில் பதக்கம் வென்று தமிழக வீரர்கள் அசத்தல்!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:59:47 PM (IST)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஜின்கியா ரஹானே ஓய்வு: வீடியோ வெளியிட்டு உருக்கம்!
வியாழன் 30, ஜூலை 2026 4:44:14 PM (IST)

காமன்வெல்த் போட்டி 2026: இந்திய வீரர்கள் சாதனை!
புதன் 29, ஜூலை 2026 11:18:45 AM (IST)

இலங்கை டெஸ்ட் தொடர்: ஷுப்மன் கில் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:46:27 PM (IST)

வைபவ் சூர்யவன்ஷி அபாரம்: ஜிம்பாப்வேயை 3-0 என வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா!
திங்கள் 27, ஜூலை 2026 4:59:28 PM (IST)

ஆசிய விளையாட்டுப் போட்டி 2026: நேரடியாகக் காலிறுதியில் களம் காணும் இந்தியா, பாகிஸ்தான்!
சனி 25, ஜூலை 2026 5:39:24 PM (IST)








