» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கொழும்புவில் பாகிஸ்தானை எதிர்கொள்வது சவால்: இந்திய உதவிப் பயிற்சியாளர் தகவல்

புதன் 11, பிப்ரவரி 2026 12:32:07 PM (IST)

கொழும்புவில் நடைபெறும் டி20 உலக கோப்படை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்வது சவால் என்று  இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார். 

2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி உறுதியாகியுள்ள நிலையில், "பாகிஸ்தானை அவர்கள் பழகிய சூழலில் (கொழும்பு) எதிர்கொள்வது சவாலானது" என இந்திய உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டஸ்சேட் தெரிவித்துள்ளார்.

அரசியல் சூழல்களைக் கடந்து கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதாகவும், பாகிஸ்தான் ஆட்டம் குறித்து முன்பே கணித்ததால் பயிற்சியில் எந்தத் தொய்வும் இல்லை என்றும் டஸ்சேட் கூறியுள்ளார். கடந்த இரண்டு வாரங்களாக பாகிஸ்தான் கொழும்புவிலேயே தங்கி விளையாடி வருவதால், அங்கிருக்கும் ஆடுகளத்தன்மை அவர்களுக்குச் சாதகமாக இருக்கக்கூடும்.

நெருக்கடியான அட்டவணை: பாகிஸ்தான் அணிக்கு நான்கு நாட்கள் ஓய்வு உள்ள நிலையில், இந்திய அணி டெல்லியில் நமீபியாவுடன் விளையாடிவிட்டு, போதிய ஓய்வின்றி உடனடியாகக் கொழும்பு செல்ல வேண்டியுள்ளது. சவால்கள் இருந்தாலும், 2022 அக்டோபர் முதல் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய கடைசி 5 போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory