» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இளையோர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி

புதன் 9, ஜூலை 2025 3:55:33 PM (IST)



இங்கிலாந்துக்கு எதிரான இளையோர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வைபவ் சூரியவன்ஷி பல்வேறு சாதனைகளை குவித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.

இங்கிலாந்து U-19 அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா U-19 அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தத் தொடரில் வைபவ் சூர்யவன்ஷி தலா ஒரு சதம் மற்றும் அரைசதம் உட்பட 355 ரன்கள் எடுத்து சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட்டுடன் சேர்ந்து இளையோர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனையாகத் திகழ்கிறது.

ஐபிஎல் 2025-ல் புதிதாக எழுச்சி கண்ட இளம் நட்சத்திரமான 14 வயது வைபவ் சூரியவன்ஷி தன் ஆட்டம் வெறுமனே வாச்சாம்பொழச்சான் ஆட்டம் அல்ல, சர்வதேச அளவிலும் இதே போல் ஆட முடியும் என்பதை நிரூபித்தத் தொடராகும் இது.

ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய இளையோர் அணி, இங்கிலாந்து இளையோர் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது, சூர்யவன்ஷி நட்சத்திர வீரராக உருவெடுத்தார். அவர் ஐந்து போட்டிகளில் 71 சராசரி மற்றும் 174.01 ஸ்ட்ரைக்-ரேட்டுடன் 355 ரன்கள் குவித்துள்ளார். இது இருதரப்பு இளையோர் ஒருநாள் சர்வதேசத் தொடரில் அதிகபட்ச ரன் எண்ணிக்கையாகும். மேலும் தொடக்க வீரராக 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

முக்கியமான 300 ரன்களுக்கும் மேல் 174 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஒரு தொடரில் எடுத்த வகையில் சூரியவன்ஷியின் சாதனை தனித்துவமானது. வங்கதேச வீரர் தவ்ஹித் ஹிருதய் இதற்கு முன்னர் இளையோர் ஒருநாள் சர்வதேசத் தொடரில் 300 ரன்களுக்கும் மேல் எடுத்ததில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 114.62 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது ஒருநாள் போட்டியில் சூர்யவன்ஷி அடித்த சதம், வெறும் 52 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியதால், இளைஞர் ஒருநாள் வரலாற்றில் அதிவேக சதமாகும். அவர் 78 பந்துகளில் 143 ரன்கள் எடுத்து 183.33 ஸ்ட்ரைக் ரேட்டில் என்பது 2013 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தானின் கம்ரான் குமல் 66 பந்துகளில் 102 ரன்களை 182.14 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் படைத்த சாதனையை முறியடித்தது.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் 31 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார் (ஸ்ட்ரைக் ரேட் 277.41), இது இளைஞர் ஒருநாள் வரலாற்றில் மிக விரைவான 80+ ரன்கள் ஆகும், இதன் மூலம் சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடித்தார் சூரியவன்ஷி. 2004 U-19 உலகக் கோப்பையில் ஸ்காட்லாந்துக்கு எதிராக 236.84 என்ற விகிதத்தில் 38 பந்துகளில் 90 ரன்களை சுரேஷ் ரெய்னா எடுத்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory