» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கவுண்டி கிரிக்கெட்டில் 820 ரன்கள் குவிப்பு: சர்ரே அணி வரலாற்று சாதனை!

செவ்வாய் 1, ஜூலை 2025 4:44:50 PM (IST)



கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணி 820 ரன்கள் குவித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெறும் முதல்தர கிரிக்கெட் போட்டியான கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணியும் துர்ஹம் அணியும் கடந்த ஜூன் 29 முதல் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் போட்டிங் செய்த சர்ரே அணி 820/9 ரன்கள் குவித்தது. இந்த அணியின் தொடக்க வீரர் டோம் சிப்லி 305 ரன்கள் குவித்து அசத்தினார்.

இந்த அணியில் சாம் கர்ரண், டான் லாரன்ஸ், வில் ஜாக்ஸ் ஆகிய மூவரும் அவர்கள் பங்கிற்கு சதம் அடித்து அசத்தினார்கள். சர்ரே அணி முதல் இன்னிக்ஸில் 161.3 ஓவர்களில் 820/9 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. அடுத்ததாக துர்ஹம் அணி 33 ஓவர்களில் 62/1 ரன்கள் எடுத்துள்ளது.

126 ஆண்டு வரலாற்றில் சர்ரே அணியின் அதிகபட்ச இலக்கு (820) இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக 811 ரன்கள் எடுத்திருந்தது. கவுண்டி கிரிக்கெட்டில் யார்க்‌ஷ்ரி அணி 1986ஆம் ஆண்டு 887 ரன்கள் அடித்ததுதான் இதுவரை முறியடிக்கப்படாமல் முதலிடத்தில் இருக்கிறது. சர்ரே அணி இந்த வரிசையில் 4-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

வழக்கமாக விளையாடும் டியூக் பந்து இல்லாமல் இந்தமுறை கூக்கபுரா பந்தில் விளையாடினார்கள். ஏனெனில் அது ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும்போது உதவும் என்ற எண்ணத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory