» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: டிராபி பெயரை மாற்ற பிசிசிஐ எதிர்ப்பு?
சனி 14, ஜூன் 2025 5:25:42 PM (IST)

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் டிராபி பெயரை மாற்ற பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் வரும் 20ம்தேதி நடைபெற உள்ளது. 2007ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் அந்த அணிக்கு எதிராக இந்தியா ஆடும் டெஸ்ட் தொடர் பட்டோடி டிராபி என அழைக்கப்பட்டது. இந்திய அணியின் முதல் டெஸ்ட் கேப்டன் பட்டோடியை கவுரவிக்கும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு முதல் இந்த டிராபியை சச்சின்-ஆண்டர்சன் டிராபி என பெயர் மாற்றம் செய்வதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் முன்னாள் இந்திய கேப்டன் மன்சூர் அலி கான் பட்டோடியின் பாரம்பரியத்தைத் தக்க வைத்துக் கொள்ளுமாறு இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

5 பந்தில் 5 விக்கெட்: அயர்லாந்து வீரர் வரலாற்று சாதனை!!
வெள்ளி 11, ஜூலை 2025 11:48:55 AM (IST)

இங்கிலாந்தில் டி -20 வென்று இந்திய மகளிர் அணி அசத்தல்!!
வியாழன் 10, ஜூலை 2025 5:51:43 PM (IST)

இளையோர் கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி
புதன் 9, ஜூலை 2025 3:55:33 PM (IST)

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மோசடி : ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது இளம்பெண் புகார்
செவ்வாய் 8, ஜூலை 2025 5:51:24 PM (IST)

டிஎன்பிஎல்: திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது திருப்பூர் தமிழன்ஸ்!
திங்கள் 7, ஜூலை 2025 11:02:49 AM (IST)

ஆகாஷ் தீப் 6 விக்கெட் சாய்த்து அபாரம்: இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைத்தது இந்தியா
திங்கள் 7, ஜூலை 2025 8:53:39 AM (IST)
