» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சாய் சுதர்சன் - ஷுப்மன் கில் அதிரடி : பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் தகுதி!!
திங்கள் 19, மே 2025 10:47:13 AM (IST)

ஐபிஎல் போட்டியின் 60-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது. இந்த அபார வெற்றியின் மூலமாக குஜராத் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
ஐபிஎல்லில் 60வது லீக் போட்டியில் நேற்று டெல்லி, குஜராத் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க வீரர் ஃபாப் டூப்ளெஸிஸ் 5 ரன்னில் வீழ்ந்தார். மற்றொரு துவக்க வீரர் கே.எல்.ராகுல் அபாரமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் இணை சேர்ந்து ஆடிய அபிஷேக் பொரெல் 30 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின், ராகுலுடன், கேப்டன் அக்சர் படேல் இணை சேர்ந்தார். இவர்கள் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நிலையில், அக்சர் படேல் (25 ரன்) அவுட்டானார்.
அதையடுத்து, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வந்தார். சிறிது நேரத்தில், ராகுல் சதம் (60 பந்து) கடந்தார். 20 ஓவர் முடிவில் டெல்லி, 3 விக்கெட் இழப்புக்கு 199 ரன் குவித்தது. இதையடுத்து, களம் இறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் டெல்லி பந்து வீச்சை துவம்சம் செய்தார். இறுதியில் 19 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 205 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றிபெற்றது. இறுதிவை ஆட்டமிழக்காமல் சாய் சுதர்சன் 108 ரன்கள், சுப்மன் கில் 93 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றியை அடுத்து, குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் பிளேஆப் தகுதி பெற்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வைபவ் - ஜூரல் அதிரடி பேட்டிங்: ஆர்.சி.பி. அணியை வீழத்தி ராஜஸ்தான் 4-வது தொடர் வெற்றி!
சனி 11, ஏப்ரல் 2026 11:10:54 AM (IST)

கொல்கத்தாவை கதறவிட்ட முகுல் சவுத்ரி: 7 சிக்ஸர்கள் விளாசிய தோனி ரசிகர்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:29:44 PM (IST)

கடைசி பந்தில் நழுவிய வெற்றி: உடைந்த மில்லர்; தேற்றிய அக்ஷர்!
வியாழன் 9, ஏப்ரல் 2026 10:12:28 AM (IST)

ஜெய்ஸ்வால் - வைபவ் அதிரடி: மும்பை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ஹாட்ரிக் வெற்றி!
புதன் 8, ஏப்ரல் 2026 4:43:52 PM (IST)

தோனி இல்லையென்றால் பிளெமிங் பூஜ்ஜியம்: புள்ளிவிவரங்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!
புதன் 8, ஏப்ரல் 2026 4:06:30 PM (IST)

தோல்விக்கு நானே காரணம் - சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உருக்கம்!
திங்கள் 6, ஏப்ரல் 2026 11:28:56 AM (IST)







