» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்து மண்ணில் இந்தியாவை வீழ்த்துவோம் : பென் டக்கெட் சவால்

வியாழன் 20, மார்ச் 2025 12:26:34 PM (IST)



"எங்களது சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவோம்" என்று இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சவால் விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அடுத்ததாக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் ஜூன் 20-ம் தேதி தொடங்க உள்ளது. அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும். அத்துடன் கடந்த இந்திய சுற்றுப்பயணத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து ஆயத்தமாகி வருகிறது.

இந்நிலையில் "இந்தியாவை எங்களது சொந்த மண்ணில் வீழ்த்துவோம்" என்று இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சவால் விடுத்துள்ளார். இது குறித்து அவர் பேசியது "சொந்த மண்ணில் இந்தியா விளையாடுவதை விட வெளிநாடுகளில் விளையாடுவது மிகவும் வித்தியாசமாக இருக்கும். இந்தியா நாங்கள் தோற்கடிக்க வேண்டிய அணி. எங்களால் அவர்களை வீழ்த்த முடியும் என்று நான் நினைக்கிறேன். இது ஒரு நல்ல தொடராக இருக்கும். பும்ராவின் பந்துவீச்சை கடந்த டெஸ்ட் தொடரில் நான் எதிர்கொண்டுள்ளேன். 

அவர் எனக்கு எதிராக என்ன செய்வார் என்பது தெரியும். அதில் நல்ல விஷயம் என்னவென்றால், அவருக்கு என்ன திறமைகள் உள்ளன என்பதும் எனக்கு தெரியும். எனவே அதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அவரை எதிர்கொள்வது சவாலானதாக இருக்கும். முகமது ஷமியின் திறமைகளும் பும்ராவை போலவே அச்சுறுத்தலாக இருக்கும். ஆனால் அவர்களுடைய தொடக்க கட்ட பந்துவீச்சை என்னால் கடந்து செல்ல முடிந்தால் நிறைய ரன்கள் அடிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory