» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மகளிர் ப்ரீமியர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணி 2-வது முறையாக சாம்பியன்!

ஞாயிறு 16, மார்ச் 2025 4:53:19 PM (IST)



மகளிர் ப்ரீமியர் லீக் 2025 சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை அணி  2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 

கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி மகளிர் ப்ரீமியர் லீகின் மூன்றாவது சீசன் தொடங்கியது. இதில் டெல்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உபி வாரியர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றன. இதில் டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடின. இதில் மும்பை வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று (மார்ச் 15) மும்பையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை டெல்லி விரட்டியது. டெல்லி தரப்பில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (30 ரன்கள்), மரிசான் கேப் (40 ரன்கள்), நிகி பிரசாத் (25 ரன்கள்) எடுத்தனர். அவர்களை தவிர மற்ற வீராங்கனைகள் ரன் சேர்க்க தடுமாறினர். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் மட்டுமே எடுத்தது டெல்லி அணி. இதன் மூலம் 8 ரன்களில் மும்பை வெற்றி பெற்றது.

இதுவரை நடைபெற்ற மூன்று சீசன்களில் மூன்று முறை இறுதிப் போட்டிக்கு டெல்லி அணி முன்னேறியுள்ளது. இருப்பினும் அந்த அணி கோப்பை வெல்லும் வாய்ப்பை நெருங்கி வந்து இழந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory