» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலக கோப்பை தோல்விக்குப் பிறகு மிரட்டல் வந்தது: வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சி தகவல்!

சனி 15, மார்ச் 2025 3:25:02 PM (IST)

டி20 உலகக் கோப்பை தோல்வியால் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்து அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை சமீபத்தில் வென்றது. அதில் தமிழக வீரர் வருண் சக்கரவத்தி சிறப்பாக பங்காற்றினார். 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார் வருண் சக்கரவத்தி. அவரது சுழலால் பலரையும் திணறடித்தார். குறிப்பாக அரையிறுதிப் போட்டியில் சிறப்பாக பந்து வீசினார்.

2021ஆம் ஆண்டு  நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி குரூப் ஸ்டேஜ் போட்டிகளோடு வெளியேறியது. 5 போட்டிகளில் 3இல் மட்டுமே வென்றது. அரையிறுதிக்கு தகுதிபெறாமல் வெளியேறியதால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினார்கள். இந்தத் தொடரில் ஆஸி. அணி நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் அதிர்ச்சி தகவலைப் பகிர்ந்துள்ளார். 

அவர் கூறியதாவது: 2021 டி20 உலகக் கோப்பை எனக்கு மிகவும் கடுமையான நாள்கள். அப்போது கடுமையான மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டேன். மிகவும் அதிக எதிர்பார்ப்புடன் அணிக்கு வந்தேன். ஆனல, ஒரு விக்கெட் கூட எடுக்காததால் அடுத்த மூன்றாண்டுக்கு என்னை அணியில் எடுக்கக்கூட தயங்கினார்கள்.

உலகக் கோப்பை முடிந்ததும் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன. இந்தியா வந்தால் உயிருடன் இருக்க மாட்டாய் என மிரட்டல் விடுவித்தவர்கள் தெரிவித்தார்கள். என்னுடைய வீட்டையும் கண்டறிந்தார்கள். விமான நிலையத்திலிருந்து சிலர் என்னை பைக்கில் பின் தொடர்ந்தனர். ரசிகர்கள் உணர்ச்சிகரமாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory