» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் : ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அறிவிப்பு!
திங்கள் 13, ஜனவரி 2025 10:04:53 AM (IST)
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம், நியூசிலாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கணுக்காலில் ஏற்பட்ட காயம் மற்றும் 2-வது குழந்தை பிறப்பு காரணமாக வருகிற 29-ந் தேதி தொடங்கும் இலங்கை டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய பேட் கம்மின்ஸ் கேப்டனாக தொடருகிறார். காயத்தால் மெல்போர்ன், சிட்னி டெஸ்ட் மற்றும் இலங்கை டெஸ்ட் தொடரை தவற விட்ட வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இடம் பெற்றுள்ளார். பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான தொடரில் சோபிக்காததால் கடைசி டெஸ்டில் இருந்து கழற்றி விடப்பட்ட ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுழற்பந்து வீச்சாளர்களில் ஆடம் ஜம்பா மட்டும் இடம் பிடித்துள்ளார். பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்கள் மேத்யூ ஷார்ட், மேக்ஸ்வெல் அங்கம் வகிக்கின்றனர். காயத்தில் இருந்து மீண்டு வரும் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீன், வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் ஆகியோரின் பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை.
சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:-
கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நாதன் எலிஸ், ஆரோன் ஹார்டி, ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், மார்னஸ் லபுஸ்சேன், மிட்செல் மார்ஷ், மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவன் சுமித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆடம் ஜம்பா.
2 முறை சாம்பியனும், ஒருநாள் போட்டி உலக சாம்பியனுமான ஆஸ்திரேலிய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தையும் (பிப்.22), 2-வது ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவையும் (பிப்.25), 3-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் (பிப்.28) எதிர்கொள்கிறது. பாகிஸ்தானுக்கு செல்வதற்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி பிப்.13-ந் தேதி இலங்கையுடன் ஒரு நாள் போட்டி ஒன்றில் ஆடுகிறது.
இதேபோல் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்க அணியை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்து இருக்கிறது. காயத்தில் இருந்து மீண்டுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் அன்ரிச் நோர்டியா 7 மாத இடைவெளிக்கு பிறகும், இங்கிடி 5 மாதத்துக்கு பிறகும் அணிக்கு திரும்பி இருக்கின்றனர்.
தென்ஆப்பிரிக்க அணி வருமாறு: பவுமா (கேப்டன்), டோனி டி ஜோர்ஜி, மார்கோ யான்சென், ஹென்ரிச் கிளாசென், கேஷவ் மகராஜ், மார்க்ரம், டேவிட் மில்லர், வியான் முல்டெர், இங்கிடி, அன்ரிச் நோர்டியா, ககிசோ ரபடா, ரியான் ரிக்கெல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வான்டெர் டஸன்.
தென்ஆப்பிரிக்க அணி லீக் ஆட்டங்களில் பிப்.21-ந் தேதி ஆப்கானிஸ்தானையும், 25-ந் தேதி ஆஸ்திரேலியாவையும், மார்ச் 1-ந் தேதி இங்கிலாந்தையும் சந்திக்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:27:50 PM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 10, டிசம்பர் 2025 8:44:24 AM (IST)










