» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சர்வதேச டி20 போட்டியில் அதிக அரைசதம் : ஸ்மிருதி மந்தனா சாதனை
சனி 21, டிசம்பர் 2024 10:51:31 AM (IST)
சர்வதேச டி20 போட்டியில் அதிக அரைசதம் அடித்து இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கணை மந்தனா சாதனை படைத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா பல்வேறு சாதனைகளை தகர்த்துள்ளார். 3வது போட்டியில் 77 ரன் குவித்த மந்தனா, டி20 போட்டிகளில் 50 பிளஸ் ரன்களாக 30வது முறை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.அவர், நியூசிலாந்து அணியை சேர்ந்த சுஸீ பேட்சின் 29 முறை 50 பிளஸ் சாதனையை தகர்த்துள்ளார். சுஸீ பேட்சின் அதிகபட்ச பவுண்டரி சாதனையையும் மந்தனா 506 பவுண்டரிகளுடன் முறியடித்துள்ளார். ஒரு தொடரில் அதிக ரன் குவித்த சாதனையை, இந்தியாவின் மித்தாலி ராஜ் 192 ரன்களுடன் நிகழ்த்தி இருந்தார். அந்த சாதனையையும், 193 ரன் குவித்து அவர் முறியடித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:27:50 PM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 10, டிசம்பர் 2025 8:44:24 AM (IST)










