» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
சச்சின் வழியை பின்பற்றினால் விராட் கோலி மீண்டும் ரன் குவிக்கலாம்: கில்கிறிஸ்ட் அட்வைஸ்!
செவ்வாய் 10, டிசம்பர் 2024 4:09:56 PM (IST)

2004-ம் ஆண்டு சிட்னி மைதானத்தில் சச்சின் ஆடியது போல் விளையாடினால் விராட் கோலி மீண்டும் ரன் குவிக்கலாம் என கில்கிறிஸ்ட் ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் 2வது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது.
அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா அடுத்த 3 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது. அந்த சூழலில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 14-ம் தேதி காபா மைதானத்தில் தொடங்க உள்ளது.
முன்னதாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி முதல் போட்டியில் சதம் அடித்து அசத்தியதால் மீண்டும் பார்முக்கு திரும்பியதாக ரசிகர்கள் கருதினர். ஆனால் 2-வது போட்டியில் 7,11 ரன்கள் அடித்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அதனால் மீண்டும் அவர் மீது விமர்சனங்கள் விழுந்துள்ளன.
இந்நிலையில் கடந்த 2004-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சச்சின் எவ்வாறு விளையாடினாரோ அதைப் போன்று விராட் கோலி செய்தால் நிச்சயம் அவரால் மீண்டும் இந்த தொடரில் ரன் குவிக்க முடியும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான கில்கிறிஸ்ட் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ஒரு பேட்ஸ்மேனுக்கு மிகப்பெரிய ஸ்கோர் என்பது உங்களை நோக்கி வீசும் பந்துவீச்சாளர்களிடம் இருந்து வருவதோ, எதிரணியின் திறமையிடமிருந்து வருவதோ கிடையாது. நாம் நமது கட்டுப்பாட்டில் பேட்டிங்கை வெளிப்படுத்தினால் கிடைப்பதுதான் மிகப்பெரிய ஸ்கோர்.
2004-ம் ஆண்டு சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சச்சின் எவ்வாறு வெளியே சென்ற பந்துகளை துரத்தி விளையாடாமல் 241 ரன்கள் குவித்தாரோ அதேபோன்று விராட் கோலியும் சூழலுக்கு ஏற்றவாறு பந்தை துரத்தாமல் தனக்கு நேராக வரும் பந்துகளை அடித்து விளையாடினால் மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க முடியும். களத்தில் நீண்ட நேரம் இருக்க பொறுமை மிக அவசியம்" என்று கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:27:50 PM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 10, டிசம்பர் 2025 8:44:24 AM (IST)










