» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
உறங்கிக் கொண்டிருந்த மிருகத்தை நியூசிலாந்து எழுப்பி விட்டுள்ளது: ஹேசில்வுட் சொல்கிறார்
புதன் 6, நவம்பர் 2024 9:46:38 PM (IST)
சொந்த மண்ணில் இந்திய அணியை முழுமையாக வீழ்த்தி, அதற்குள் உறங்கிக் கொண்டிருந்த மிருகத்தை நியூசிலாந்து எழுப்பியுள்ளதாக ஆஸ்திரேலிய பவுலர் ஹேசில்வுட் கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை உள்நாட்டில் 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 22-ந்தேதி பெர்த்தில் தொடங்குகிறது.இந்த தொடருக்கு தயாராகும் 70 டெஸ்டில் விளையாடிய அனுபவசாலியான ஆஸ்திரேலிய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் 33 வயதான ஜோஷ் ஹேசில்வுட் அளித்த ஒரு பேட்டியில், ‘நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்வி இந்திய அணிக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தை தட்டி எழுப்பியிருக்கும். அந்த மிருகம் (இந்திய அணியின் எழுச்சி) எப்போது வெளிவரும் என்பதை பார்க்க வேண்டும்.
3-0 என்ற கணக்கில் வெல்வதை விட 0-3 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை தழுவியது நல்லது. இதன் மூலம் அவர்களின் தன்னம்பிக்கை குறைந்திருக்கும். இருப்பினும் அந்த அணியில் சிலரை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஏற்கனவே ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். எனவே அது பற்றி அதிகம் கவனம் செலுத்த விரும்பவில்லை. எப்படியோ அவர்கள் நியூசிலாந்திடம் முழுமையாக தோற்றது எங்களுக்கு சாதகமாக இருக்கும்.
எல்லா பாராட்டுகளும் நியூசிலாந்து வீரர்களையே சாரும். அருமையான கிரிக்கெட்டை விளையாடினார்கள். இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வசப்படுத்துவது நம்ப முடியாத ஒன்று. அங்கு ஒரு போட்டியில் வெல்வதே மிகவும் கடினம். அப்படியிருக்க தொடரை 3-0 என்று கைப்பற்றியிருப்பது மிகப்பெரிய விஷயமாகும்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மோதல் மிகப்பெரிய தொடர். ஒவ்வொரு முறையும் நாங்கள் அவர்களுடன் விளையாடும் போது ஆஷஸ் போட்டிக்கு இணையாக இருக்கும். ரசிகர்களின் வருகையும் அதிகமாக இருக்கும். டி.வி. ரேட்டிங்கும் எகிறும். எனவே இது முன்பு எப்போதையும் விட மிகப்பெரிய தொடராக அமையலாம்’ என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:27:50 PM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 10, டிசம்பர் 2025 8:44:24 AM (IST)










