» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
பஞ்சாப் அணியின் மேட்ச் வின்னராக மாறிய ஷஷாங்க் சிங்: வாழ்த்துகள் குவிகிறது!
வெள்ளி 5, ஏப்ரல் 2024 11:12:29 AM (IST)
குஜராத் நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை வெல்ல நேர்மறையான மனநிலை எனக்கு உதவியது என்று பஞ்சாப் கிங்ஸின் மேட்ச் வின்னர் ஷஷாங்க் சிங் கூறினார்.
அகமதாபாத்தில் நடந்த ஐபிஎல் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.இதற்கு முக்கிய காரணமானவர் 32 வயதான சஷாங்க் சிங். இவரை பஞ்சாப் அணி ஏலத்தில் ரூ.20 லட்சத்துக்கு எடுத்தது. ஆனால் அவர்கள் அடுக்க நினைத்தது 19 வயது சஷாங்க் சிங். ஆனாலும் பஞ்சாப் அவருக்கு வாய்ப்பளித்தது. 15 ஐபிஎல் போட்டிகளில் 9 இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடி 160 ரன்கள் எடுத்துள்ளார். சன்ரைசர்ஸ் அணியில் விளையாடி வந்த இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார்.
நேற்றையப் போட்டியில் 200 ரன்கள் என்ற இலக்கினை விரட்டும்போது சீனியர் வீரர்கள் ஆட்டமிழக்க குறைவான ஆட்டம் ஆடிய சஷாங்க் சிங் 29 பந்துகளில் 61 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். ஆட்ட நாயகன் விருதுபெற்ற சஷாங்க் சிங்குக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. தன்னம்பிக்கை நிரம்பியுள்ளதாக பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள்.