» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த வைஷாலி!
சனி 2, டிசம்பர் 2023 11:50:04 AM (IST)
இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி பெற்றுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட் மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளைப் பதிவுசெய்ததன் மூலம் 2,500 புள்ளிகளை வைஷாலி கடந்தார். இவர் இந்திய அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெரும் 3-வது பெண் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இவர் பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:27:50 PM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 10, டிசம்பர் 2025 8:44:24 AM (IST)










