» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது மிகவும் கடினம்: ஸ்டீவ் ஸ்மித்
செவ்வாய் 7, நவம்பர் 2023 12:29:20 PM (IST)
புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளை வீழ்த்துவது மிகவும் கடினம் என ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: உலகக் கோப்பையில் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் அனைத்து அணிகளுக்கும் இருக்கும். ஆனால், அரையிறுதிக்குத் தகுதி பெற அந்தந்த அணிகள் கண்டிப்பாக தங்களது கடின உழைப்பை கொடுக்க வேண்டும்.நாங்கள் அரையிறுதியில் இடம்பெற வேண்டும் என நான் விரும்புகிறேன். நடப்பு உலகக் கோப்பையின் தொடக்கத்தில் சில தோல்விகளைத் தழுவினாலும், பின்னர் வெற்றிப் பாதைக்குத் திரும்பினோம்.
நாளை எங்களுக்கு மிகப் பெரிய போட்டி உள்ளது. ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் அரையிறுதிக்குத் தகுதி பெறும் என நினைக்கிறேன். புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகளான இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா சிறப்பான கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். அவர்களை வெல்வது மிகவும் கடினம் என்றார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:27:50 PM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 10, டிசம்பர் 2025 8:44:24 AM (IST)

சையத் முஷ்டாக் அலி கோப்பை: சாய் சுதர்சன் அதிரடி சதம்: தமிழக அணி ஆறுதல் வெற்றி!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:35:16 PM (IST)










