» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வார்னர், மேக்ஸ்வெல் அதிரடி சதம்: உலகக் கோப்பை வரலாற்றில் ஆஸி. வரலாற்று சாதனை!

வியாழன் 26, அக்டோபர் 2023 10:53:23 AM (IST)



உலக கோப்பை கிரிக்கெட்டில் நெதர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 309 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங் செய்தது. ஆரம்பமே அதிரடியாக தொடங்கினார் வார்னர். ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்து அசத்திய வார்னரின் வேகம் சதத்தில்தான் முடிந்தது.  வார்னர் 104  ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த ஸ்மித், லபுஷேன் 71, 62 ரன்கள் முறையே எடுத்தனர். 

உலக சாதனை படைத்த மேக்ஸ்வெல்: 40 பந்துகளில் சதமடித்து அசத்தினார் மேக்ஸ்வெல். 44 பந்துகளில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் மேக்ஸ்வெல். இதில் 9 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் அடங்கும். மற்ற பேட்டர்களான மிட்செல் மார்ஷ் - 9, கிரீன் - 8, கம்மின்ஸ்- 12, இங்கிலிஸ்- 14 ரன்கள் மட்டுமே எடுத்தனர். 

ஆஸி. அணி 50 ஓவர் முடிவில் 399/8 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்தின் வான் பீக் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.  400 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் அடுத்து ஆடிய நெதர்லாந்து அணி 21 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதிகபட்சமாக விகரம்ஜித் சிங் 25 ரன்கள் எடுத்தார். 

இதன் மூலம் ஆஸி. அணி 309 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 48 வருட உலகக் கோப்பை வரலாற்றில் இவ்வளவு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணியாக ஆஸ்திரேலிய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital



CSC Computer Education






Thoothukudi Business Directory