» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: உலக சாம்பியனை வீழ்த்தினார் தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி!
வெள்ளி 20, அக்டோபர் 2023 10:21:25 AM (IST)

கத்தார் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக விளையாடிய கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றார்.
கத்தாரில் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தத் தொடரின் 7-வது சுற்றில் உலக சாம்பியனும், முதல் நிலை வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார் இந்திய வீரர் கார்த்திகேயன் முரளி.
இதில் 40-வது காய் நகர்த்தலின் போது கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றார். இதன் மூலம் கிளாசிக் போட்டியில் கார்ல்சனை வீழ்த்திய 3-வது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தமிழகத்தின் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திகேயன் முரளி. இதற்கு முன்னர் ஹரி கிருஷ்ணா, விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோரும் கிளாசிக்கல் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி உள்ளனர்.
7 சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில் கார்த்திகேயன் முரளி 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தை 5 பேருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்திய கிராண்ட் மாஸ்டர்களான நாராயணன், அர்ஜூன் எரிகைசி, உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சிந்தரோவ், யாகுபோயேவ் நோடிர்பெக், ரஷ்யாவின் டேவிட் பரவ்யன் ஆகியோரும் தலா 5.5 புள்ளிகளை பெற்றுள்ளனர். இந்தத் தொடரில் இன்னும் இரு சுற்றுகள் மீதம் உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:27:50 PM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 10, டிசம்பர் 2025 8:44:24 AM (IST)










