» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மாநில அளவிலான கராத்தே போட்டி. சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை
வியாழன் 19, அக்டோபர் 2023 10:54:29 AM (IST)

மாநில அளவிலான கராத்தே போட்டியில சாத்தான்குளம் மார்னிங் ஸ்டார் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
சென்னையில் 18வது ஆல் இந்தியா சிட்டோ ரியு ஓபன் கராத்தே மாநில அளவிலான போட்டிகள் நடந்தது. இதில் மாநில அளவில் இருந்து பல பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இதில் சாத்தான்குளம் மார்னிங் ஸ்டார் பப்ளிக் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மாணவர்கள்ஆரிக் ஜோஸ்வின் ஜோனா,தர்மராஜ் ,ஜெபிசா ஷாமிலி, யாஸ்லினா, அனிட், கார்த்திகா தேவி, ஸ்ரீர்ஷன், திரிஷிகா, காட்சன், வினய்சிங்,பிரதிக் சுமன் ஜெஸ்ரன்,ஜெஸ்டன்,ஜோஸின் வெல்பர் ராஜ், அவந்திகாஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகள் கட்டா பிரிவிலும், 2 மாணவர்கள் குமிதே பிரிவிலும் வெற்றி பெற்று பள்ளிககு பெருமை சேர்த்துள்ளனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சென்னை காரப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கணபதி சான்றிதழ் மற்றும் வெற்றிக் கோப்பைகளை வழங்கினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், பயிற்சி அளித்த கராத்தே பயிற்சியாளர் இசக்கியப்பன் ஆகியோரை பள்ளியின் முதல்வர் கலைச்செல்வி, ஆசிரியை அபர்னாலெட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளை பாராட்டினர் .
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

உலகக்கோப்பை ஸ்குவாஷ் சாம்பியன்: புதிய வரலாறு படைத்தது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:25:09 PM (IST)

பந்துவீச்சில் அசத்திய இந்தியா: 3வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:35:45 AM (IST)

ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வென்றது இந்தியா!
திங்கள் 15, டிசம்பர் 2025 8:41:56 AM (IST)

நாங்கள் கம்பேக் கொடுத்திருக்க வேண்டும்: தோல்வி குறித்து கேப்டன் சூர்யகுமார் கருத்து
வெள்ளி 12, டிசம்பர் 2025 4:25:40 PM (IST)

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கியில் 8-வது முறையாக ஜெர்மனி சாம்பியன்: இந்தியாவுக்கு வெண்கலம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 12:27:50 PM (IST)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!
புதன் 10, டிசம்பர் 2025 8:44:24 AM (IST)










