» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
தூத்துக்குடியில், 7-ம் தேதி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
புதன் 27, செப்டம்பர் 2023 8:23:14 AM (IST)
தூத்துக்குடியில், வருகிற 7-ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் பங்கேற்க அணிகள் பதிவு செய்யலாம்.
தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழக தலைவர் டி.ஜான்வசீகரன், செயலாளர் எஸ்.ரமேஷ்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாவட்ட அளவிலான ஆண்கள் கைப்பந்து போட்டி வருகிற 7, 8-ம் தேதிகளில் தூத்துக்குடி ஜிம்கானா கிளப் விளையாட்டு அரங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
போட்டிகள் அனைத்தும் இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் போட்டி விதிமுறைகள்படி நடக்கும். மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறும் முதல் 2 அணிகள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். மண்டல போட்டிகளில் வெற்றி பெறும் முதல் 2 அணிகள் மாநில போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் போட்டிக்கான நுழைவு படிவங்களை தூத்துக்குடி சின்னமணி நகரில் உள்ள மாவட்ட கைப்பந்து கழக அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) முதல் பெற்றுக் கொண்டு வருகிற 3-ம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்து கொடுத்து பதிவு செய்து, அணியின் வருகையை உறுதி செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு போட்டி பொறுப்பாளர்கள் ஜெயபால் 94420 55355, ஜூடு ரஞ்சித் 94438 71330 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.