» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர்: ஆஸி கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமனம்!

புதன் 15, மார்ச் 2023 10:36:50 AM (IST)



இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இருஅணிகள் இடையிலான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரை இந்தியஅணி 2-1 என்ற கணக்கில் வென்றது. டெஸ்ட் தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் வரும் 17-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

2-வது ஆட்டம் 19-ம் தேதி விசாகப்பட்டினத்திலும், கடைசி மற்றும் 3-வது ஆட்டம் 22-ம் தேதிசென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திலும் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் தனது தாய் இறந்ததை தொடர்ந்து பாட் கம்மின்ஸ் சிட்னியிலேயே தங்கி உள்ளதால் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கு ஸ்டீவ்ஸ்மித் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நட்சத்திர வீரரான டேவிட் வார்னரும் அணிக்கு திரும்பி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory