» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு: ஜூன் 29 முதல் தேர்வுகள் தொடக்கம்!

திங்கள் 22, ஜூன் 2026 4:51:01 PM (IST)

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. தனித்தேர்வர்கள் நாளை (ஜூன் 23) பிற்பகல் முதல் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகத் தங்களது நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு ஹால் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. தனித்தேர்வர்கள் நாளை (ஜூன் 23) பிற்பகல் முதல் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாகத் தங்களது நுழைவுச் சீட்டினைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது!

நடைபெறவுள்ள ஜூன்/ஜூலை 2026 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த தக்கல் உட்பட அனைத்துத் தனித்தேர்வர்களும் நாளை (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் முதல் தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

பதிவிறக்கம் செய்யும் முறை: தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று, 'HALL TICKET' என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் தோன்றும் பக்கத்தில் 'HSE SUPPLEMENTARY EXAM, JUNE/JULY 2026 - HALL TICKET DOWNLOAD' என்பதைத் தேர்வு செய்து, தங்களது விண்ணப்ப எண் (Application Number) அல்லது நிரந்தரப் பதிவெண் (Permanent Register No.) மற்றும் பிறந்த தேதியைக் (Date of Birth) குறிப்பிட்டு நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தேர்வு அட்டவணை: 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வுகள் ஜூன் 29-ஆம் தேதி தொடங்கி ஜூலை 7 வரை நடைபெறவுள்ளன. இதனைத் தொடர்ந்து, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் ஜூலை 8-ஆம் தேதி முதல் ஜூலை 16 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய நிபந்தனைகள்: செய்முறைத் தேர்வுக்கான தேதிகள் குறித்த விபரங்களைத் தனித்தேர்வர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை நேரில் அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரியத் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்த பின், தாங்கள் எழுத வேண்டிய பாடங்கள் மற்றும் தேர்வு நாட்களைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உதவி எண்கள்: நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வது தொடர்பான சந்தேகங்களுக்குத் தேர்வர்கள் 9498383075, 9498383076 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory