» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 1ஆம் தேதி மதுக்கடைகள் மூடல் - ஆட்சியர் உத்தரவு

புதன் 29, ஏப்ரல் 2026 3:54:51 PM (IST)

மே தினத்தை முன்னிட்டு வருகின்ற மே 1-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: மே தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் (டாஸ்மாக்), மதுபானக் கூடங்கள் மற்றும் FL2, FL3, FL3A, FL3AA உரிமம் பெற்ற தனியார் தங்கும் விடுதி மதுபானக் கூடங்கள் அனைத்தும் செயல்படாது.

அன்றைய தினம் மதுபான விற்பனை ஏதும் நடைபெறக்கூடாது எனவும், விதிகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory