» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென் மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கும்: வைகோ எச்சரிக்கை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:07:56 PM (IST)
"மத்திய அரசு கொண்டு வரத் துடிக்கும் தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறினால், தென்மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே பாஜகவால் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும்" என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை ஆதரித்து, அரச்சலூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வைகோ பேசியதாவது: தற்போது மக்கள் தொகை நான்கு மடங்கு உயர்ந்துவிட்டதாகக் கூறி, அதன் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு செய்யப்பட்டால், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 888 ஆக உயரும் எனச் சொல்லப்படுகிறது.மக்கள் தொகை அதிகமாக உள்ள வடமாநிலங்களில் இதன் மூலம் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும். இதனால் தென்மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் ஆதரவு துளியும் இல்லாமலேயே பாஜகவால் மத்தியில் ஆட்சியைக் கைப்பற்ற முடியும். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரான மத்திய அரசின் ஒரு பித்தலாட்டம்.
நல்லவேளையாக, தற்போது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை இல்லாததால், இந்த மசோதாவை அவர்களால் எளிதாக நிறைவேற்ற முடியவில்லை. தமிழகத்தின் உரிமைகளையும், மாநில நலன்களையும் காக்க வேண்டுமெனில் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி நீடிக்க வேண்டியது அவசியம்.
திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்களைப் போல வேறெந்த மாநிலத்திலும் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, மக்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்காளர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்பட வேண்டும் : அதிமுக வேட்பாளரின் பேச்சால் சர்ச்சை!
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:51:43 PM (IST)

குமரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை தீவிரம் : ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:35:13 PM (IST)

திருநெல்வேலியில் தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டி: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திங்கள் 20, ஏப்ரல் 2026 5:08:41 PM (IST)

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஜூன் 15-ஆம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 20, ஏப்ரல் 2026 3:37:26 PM (IST)

தமிழர்களை நேருக்கு நேர் நின்று சரணடைய வைக்க முடியாது: பாஜக - அதிமுக மீது ராகுல் கடும் தாக்கு!
திங்கள் 20, ஏப்ரல் 2026 12:50:35 PM (IST)

திமுகவை எதிர்த்தால்தான் வளர முடியும் என்பது தவறு: விஜய் குறித்து முதல்வர் விளக்கம்!
திங்கள் 20, ஏப்ரல் 2026 11:29:33 AM (IST)







