» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொலைக்காட்சிப் பெட்டிக்கு வாக்களிக்க வேண்டும் : தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்!

ஞாயிறு 19, ஏப்ரல் 2026 1:31:43 PM (IST)



தமிழக சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் பிரேம்குமாருக்கு வாக்களிக்குமாறு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

எடப்பாடி தொகுதியில் சுயேச்சையாகக் களம் காணும் கூ. பிரேம்குமார், ஏற்கனவே விஜய் ரசிகர் மன்றத்தில் நிர்வாகியாகப் பணியாற்றியவர். "நம்முடைய சகோதரர் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்தவர்" என்ற அடிப்படையில், அவருக்குத் தமிழக வெற்றிக் கழகம் ஒருமனதாக ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தால் கூ. பிரேம்குமாருக்கு வரிசை எண் 12-இல் 'தொலைக்காட்சிப் பெட்டி' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரைத் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராகவே கருதி, கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் எடப்பாடி தொகுதி மக்களும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என விஜய் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில், எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் செல்வாக்கை முடக்கவும், குறுக்கு வழியில் வெற்றி பெறவும் முயல்பவர்களுக்கு இந்தப் போட்டி ஒரு சரியான பாடமாக அமையட்டும் என்று விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் நேரடியாகப் போட்டியிடாத நிலையிலும், தனது முன்னாள் நிர்வாகியைச் சுயேச்சை வேட்பாளராக ஆதரிப்பதன் மூலம் எடப்பாடி தொகுதியின் தேர்தல் களம் தற்போது கூடுதல் பரபரப்பை எட்டியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory