» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குடும்பத் தகராறில் பெற்ற தாயை உயிரோடு எரித்துக் கொன்ற மகன்: நெல்லை அருகே பயங்கரம்!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:03:40 AM (IST)
திருநெல்வேலி அருகே தேவர்குளம் பகுதியில் குடும்பப் பிரச்சினை காரணமாக 67 வயது தாயை, அவரது மகனே தீ வைத்து எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள பன்னீர்ஊத்து காலனி தெருவைச் சேர்ந்தவர் பொன்னம்பலம். இவரது மனைவி சுப்புத்தாய் (67). இத்தம்பதிக்கு இரண்டு மகள்களும், பொன்ராஜ் (31) என்ற மகனும் உள்ளனர். மகள்களுக்குத் திருமணமாகிவிட்ட நிலையில், கட்டிடத் தொழிலாளியான பொன்ராஜ் இன்னும் திருமணமாகாமல் தாயுடன் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாகத் தாய்க்கும் மகனுக்கும் இடையே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
நேற்று (சனிக்கிழமை) மதியம் வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குச் சாப்பிட வந்த பொன்ராஜுக்கும், சுப்புத்தாய்க்கும் இடையே மீண்டும் கடும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பொன்ராஜ், தனது தாயைத் தாக்கி கீழே தள்ளிவிட்டு, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை அவர் மீது ஊற்றித் தீ வைத்துள்ளார். இதில் சுப்புத்தாயின் உடல் முழுவதும் தீ பரவி அலறியுள்ளார். இச்சம்பவத்தில் பொன்ராஜின் கை மற்றும் கால்களிலும் தீக்காயம் ஏற்பட்டது.
சுப்புத்தாயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பலத்த தீக்காயமடைந்த இருவரையும் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி சுப்புத்தாய் பரிதாபமாக உயிரிழந்தார். பொன்ராஜுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துத் தேவர்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமாரி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார். பெற்ற தாயையே மகன் உயிரோடு எரித்துக் கொன்ற இச்சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக - தவெக போட்டி? விஜய் பேச்சுக்கு பதிலளிக்கத் தயாரில்லை: முதல்வர் ஸ்டாலின் பேட்டி!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 10:50:26 AM (IST)

திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கவே விஜய் களமிறங்கியுள்ளார் : நயினார் நாகேந்திரன்
சனி 11, ஏப்ரல் 2026 5:47:26 PM (IST)

தமிழக உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார் அதிரடி மாற்றம்: தேர்தல் ஆணையம் உத்தரவு!
சனி 11, ஏப்ரல் 2026 5:37:39 PM (IST)

நெல்லையில் 15 நாட்கள் கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: ஏப்ரல் 17-ல் தொடக்கம்!
சனி 11, ஏப்ரல் 2026 5:13:32 PM (IST)

இலவசங்களுக்கு நிதி எங்கிருந்து வரும்? கட்சிகள் விளக்கமளிக்க வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்!
சனி 11, ஏப்ரல் 2026 4:17:05 PM (IST)

உண்மையான மக்களாட்சியை அமைப்போம்: தவெக தொண்டர்களுக்கு விஜய் அழைப்பு
சனி 11, ஏப்ரல் 2026 3:50:15 PM (IST)







