» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கர் கைது: தோழியும் சிக்கினார்!

வியாழன் 9, ஏப்ரல் 2026 11:54:36 AM (IST)

நீதிமன்ற நிபந்தனை ஜாமீனை மீறி, ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே தலைமறைவாக இருந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவருடன் தங்கியிருந்த அவரது தோழி மாலதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவுக்கு மீடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சவுக்கு சங்கர் மீது, ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை காவல் நிலையங்களில் கடந்த ஆண்டு இரண்டு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக கடந்த டிசம்பர் 13-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு உடல்நலக் குறைவு இருப்பதாகக் கூறி அவரது தாயார் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மார்ச் 25-ம் தேதி வரை சவுக்கு சங்கருக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது.

நிபந்தனை ஜாமீன் காலம் முடிவடைந்த மார்ச் 25-ம் தேதி, சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்க வேண்டும். ஆனால், அவர் சரணடையாமல் தலைமறைவானார். இதனைத் தொடர்ந்து, அவரை "தலைமறைவு குற்றவாளி" என அறிவித்த சென்னை போலீசார், அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இதற்கிடையில், தன் மீதான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சவுக்கு சங்கர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், வழக்கை ஏப்ரல் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சவுக்கு சங்கர் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.
ஆந்திராவில் அதிரடி கைது

சவுக்கு சங்கரின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்த போலீசாருக்கு, அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. நேற்று அங்கு விரைந்த சென்னை தனிப்படை போலீசார், சவுக்கு சங்கரை சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.

அவருடன் தங்கியிருந்த அவரது தோழி மாலதியும் கைது செய்யப்பட்டார். மாலதி மீது ஏற்கனவே சில வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் அவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து

BabuApr 10, 2026 - 07:13:03 PM | Posted IP 172.7*****

1000 kodi adichavan kannuku munnad suthitu irukan avana innu pidikala athu sari fir pottal thana pidikka mudiyum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory