» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசுப் பணம் கையாடல் புகார்: புதுப்பட்டி ஊராட்சி செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்!
புதன் 18, மார்ச் 2026 10:16:10 AM (IST)
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பட்டி ஊராட்சியில் முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளரை மாவட்ட ஆட்சியர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் ராஜேஷ் என்பவர் ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வந்தார். மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காகப் பொதுமக்களிடமிருந்து குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டது.இவ்வாறு பொதுமக்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட தொகையை முறையாக அரசு கணக்கில் செலுத்தாமல், பல லட்சம் ரூபாய் வரை ராஜேஷ் மோசடி செய்ததாகப் புகார்கள் எழுந்தன. இந்தப் புகார்கள் குறித்துத் துறை ரீதியான அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், அரசுப் பணத்தைக் கையாடல் செய்தது மற்றும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, நிர்வாகத் திறக்குறைவு மற்றும் நிதி மோசடி புகாரில் சிக்கிய ஊராட்சி செயலாளர் ராஜேஷைப் பணியிடை நீக்கம் செய்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கை அப்பகுதி ஊராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன் : தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மறுப்பு!
ஞாயிறு 22, மார்ச் 2026 1:26:35 PM (IST)

வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:52:09 AM (IST)

பாஜவில் இருந்து வெளியேற முடிவு? – ஆலோசனைக் கூட்டம் குறித்து சரத்குமார் விளக்கம்
சனி 21, மார்ச் 2026 5:49:53 PM (IST)

தமிழகத்தில் குடிநீர் கேன் மற்றும் பாட்டில் விலை உயர்வு: உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:17:49 PM (IST)

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை!
சனி 21, மார்ச் 2026 4:03:23 PM (IST)

குமரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சனி 21, மார்ச் 2026 3:35:38 PM (IST)








