» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்: நெல்லை பேருந்து நிலையத்தில் பயங்கரம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 2:07:23 PM (IST)
நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பட்டப்பகலில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கணவர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர் (35). இவருடைய மனைவி பேச்சியம்மாள் (33). இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கடந்த சில காலமாகவே குடும்பப் பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இன்று இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபித்துக்கொண்டு பேச்சியம்மாள் நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார்.
அவரைப் பின்தொடர்ந்து வந்த சுதாகர், பேருந்து நிலையத்திலேயே வைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் பேச்சியம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பேச்சியம்மாள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையத்தில் நடந்த இந்தத் துயரச் சம்பவம் அங்கிருந்த பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கொலை செய்த கையோடு சுதாகர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரணடைந்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சந்திப்பு போலீசார், பேச்சியம்மாளின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, சுதாகரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு: ஏப். 23-ல் வாக்குப்பதிவு - மே 4ல் ரிசல்..!
ஞாயிறு 15, மார்ச் 2026 6:16:47 PM (IST)

நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:41:22 AM (IST)

மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:35:31 AM (IST)

பெட்ரோல் நிலையங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு : டி.ஜி.பி.க்கு விற்பனையாளர்கள் சங்கம் கடிதம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 10:29:44 AM (IST)

தொழிலதிபரிடம் ரூ.25 கோடி மோசடி : நெல்லை திமுக கவுன்சிலரின் கணவர் கைது!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:47:30 AM (IST)

ஆளில்லாத ரயில்வே கேட்டில் கல்லூரிப் பேருந்து மீது ரயில் மோதல் - 23 மாணவர்கள் படுகாயம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:43:47 AM (IST)







