» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நெல்லையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது!
சனி 14, மார்ச் 2026 8:43:47 AM (IST)
நெல்லையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்த, அவரது தாயின் இரண்டாவது கணவரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நெல்லைப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இதற்கிடையே, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் கடலூரைச் சேர்ந்த ஒரு தொழிலாளியுடன் அந்தப் பெண்ணிற்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியதை அடுத்து, இருவரும் திருமணம் செய்துகொண்டு நெல்லை டவுன் பகுதியில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், தனது முதல் கணவருக்குப் பிறந்த 6 வயது சிறுமிக்கு அந்தத் தொழிலாளி பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்துத் தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், உடனடியாக நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்தத் தொழிலாளி மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைத்தனர்.
பாதுகாப்பாக இருக்க வேண்டிய வீட்டிலேயே சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன் : தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மறுப்பு!
ஞாயிறு 22, மார்ச் 2026 1:26:35 PM (IST)

வீட்டின் கதவை உடைத்து 31 பவுன் நகை கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:52:09 AM (IST)

பாஜவில் இருந்து வெளியேற முடிவு? – ஆலோசனைக் கூட்டம் குறித்து சரத்குமார் விளக்கம்
சனி 21, மார்ச் 2026 5:49:53 PM (IST)

தமிழகத்தில் குடிநீர் கேன் மற்றும் பாட்டில் விலை உயர்வு: உற்பத்தியாளர் சங்கம் அறிவிப்பு
சனி 21, மார்ச் 2026 4:17:49 PM (IST)

பெங்களூரு - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் நேரம் மாற்றம்: பயணிகள் கோரிக்கை!
சனி 21, மார்ச் 2026 4:03:23 PM (IST)

குமரியில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு வாகனம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்
சனி 21, மார்ச் 2026 3:35:38 PM (IST)








