» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி முறையீடு

வெள்ளி 6, மார்ச் 2026 5:32:10 PM (IST)

நாங்குநேரியில் நடந்த கொடூர இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் முறையீடு செய்துள்ளார்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெரும்பத்து பஜார் பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், அங்கு நின்றிருந்த பொதுமக்களைச் சரமாரியாக வெட்டியது. இந்தத் தாக்குதலில் ஜான் (42) மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த செங்கல் சூளை தொழிலாளி திருநாத் கட்டா ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 6 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாகப் போலீஸார் 9 பேரைக் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதி ராமன் அமர்வு முன்பாக வழக்கறிஞர் ஆயிரம் கே.செல்வகுமார் ஆஜராகி ஒரு முக்கிய முறையீட்டை முன்வைத்தார். அதில் அவர் குறிப்பிட்டதாவது: "நாங்குநேரி தாக்குதலில் கொல்லப்பட்ட வடமாநிலத் தொழிலாளி உள்ளிட்ட இருவரின் குடும்பங்களுக்குத் தமிழக அரசு இதுவரை எந்தவிதமான நிவாரணமோ அல்லது இழப்பீடோ அறிவிக்கவில்லை. எந்தக் காரணமும் இன்றி கொல்லப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளியின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றமே இந்த விவகாரத்தைத் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.

இந்த முறையீட்டைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரணம் குறித்துத் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை உரிய அதிகாரிகளிடம் கேட்டுத் தெரிவிக்குமாறு அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory