» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சங்கீதாவுக்கு எதிராக தவெகவினரின் அநாகரிகப் போக்கு: விஜய் கண்டிக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:42:21 AM (IST)

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராகத் தவெக தொண்டர்கள் மேற்கொண்டு வரும் பதிவுகளுக்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தமிழ்நாடு மாநிலப் பொதுச்செயலாளர் மு. கண்ணகி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: "தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், பிரபல திரைக்கலைஞருமான விஜய் - சங்கீதா இணையர்களின் விவாகரத்து மனு நீதிமன்றத்தில் உள்ள நிலையில், அது குறித்து விவாதித்து முடிவெடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் பொறுப்பாகும். ஒரு குடும்பம் சார்ந்த தனிப்பட்ட பிரச்சினைகளில் மூன்றாம் நபர்கள் கருத்து தெரிவிப்பதும், பொதுவெளியில் இழிவாகப் பேசுவதும் யாராக இருந்தாலும் கண்டனத்திற்குரியது."

"சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்த நிலையில், தவெக தொண்டர்கள் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சங்கீதாவின் படங்களைக் கேலிச்சித்திரங்களாகவும், ஆபாசமான வார்த்தைகளாலும் இழிவான முறையில் பதிவிட்டு வருவது வன்மையான கண்டனத்திற்குரியது."
விஜய்யின் மவுனம் குறித்து விமர்சனம்
"அரசியல் கட்சி தொடங்கி, 'முதல்வர் ஆவேன்' என்று கூறி வரும் விஜய், அதற்குரிய சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். தொண்டர்கள் தவறான முறையில் சமூக ஊடகங்களில் ஈடுபடும்போது, அவற்றைக் கண்டிக்காமல் மவுனம் காப்பது மிகப்பெரிய தவறு. இது பெண்களின் மீதான இழிவான பார்வை, ஆணாதிக்கச் சிந்தனை மற்றும் வக்கிர குணத்தை ஊக்குவிப்பதற்குச் சமமாகும். தன் கட்சியின் தொண்டர்கள் செய்யும் பிழையைக் கண்டிக்காமல் இருப்பது மிகப்பெரிய குற்றமாகும்."
கோரிக்கை
"அரசியல் கட்சியை வழிநடத்தும் தலைவரான விஜய், இத்தகைய செயல்களில் ஈடுபடும் தொண்டர்களை உடனடியாகக் கண்டிப்பதோடு, அந்த இழிவான பதிவுகளை நீக்க வலியுறுத்த வேண்டும் என இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது."
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 11:34:54 AM (IST)

மேற்கு ஆசியப் போர்: வளைகுடா நாடுகளில் தவித்த 217 இந்தியர்கள் சென்னை வருகை!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:35:58 AM (IST)

திருவண்ணாமலையில் மாசி மாத பவுர்ணமி கிரிவலம்: சந்திர கிரகணத்திலும் நடை திறப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 10:28:33 AM (IST)

பிளஸ்-2 தேர்வுக்கு மினி ஜெராக்ஸ் பிட்: ஜெராக்ஸ் கடைகளுக்கு கல்வி அதிகாரி கடும் எச்சரிக்கை!
செவ்வாய் 3, மார்ச் 2026 8:00:20 AM (IST)

குலசேகரம் அருகே தொட்டிப்பாலம் உடைப்பு ஏற்படும் அபாயம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
திங்கள் 2, மார்ச் 2026 8:30:58 PM (IST)

தமிழகம் வளர்ச்சியில்லை, வீழ்ச்சியில்தான் உள்ளது: திமுக அரசு மீது நயினார் நாகேந்திரன் சாடல்
திங்கள் 2, மார்ச் 2026 5:34:47 PM (IST)