» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மத்திய பட்ஜெட் 2026: விலை குறையும், விலை உயரும் பொருட்கள் பட்டியல்!

திங்கள் 2, பிப்ரவரி 2026 8:25:40 AM (IST)

மத்திய பட்ஜெட்  2026-27 காரணமாக தொலைக்காட்சி உபகரணங்கள் மின்சார வாகன பேட்டரிகள், ஜவுளி பொருள்கள், செல்போன் உள்ளிட்ட பொருட்களின் விலை குறையும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2026-27ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை, பொருளாதார ஊக்குவிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதால் நடுத்தர மக்களின் மீதான பாரத்தைக் குறைக்கும் விதத்தில் அமைந்துள்ளதாகப் பொருளாதார நிபுணர்களில் ஒருசாரார் தெரிவிக்கின்றனர். வரிகுறைக்கப்பட்டுள்ளதால் கீழ்காணும் பொருள்களின் விலை குறையும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

விலை குறையும் பொருள்கள் :

புற்றுநோய், நீரிழிவு நோய்க்கான மருந்துகள் உள்பட 17 வகையான உயிர்காக்கும் மருந்துகள்

காலணிகள்

தோல் பொருள்கள்

தொலைக்காட்சி உபகரணங்கள்

மைக்ரோவேவ் ஓவன்கள்

கேமிராக்கள்

குறிப்பிட்ட சில மது வகைகள் மற்றும் ரசாயனங்கள்

வெளிநாட்டுக் கல்வி

வெளிநாட்டுச் சுற்றுலா

எரிசக்தி துறைசார் உபகரணங்கள்

அணு ஆயுத திட்டங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் பொருள்கள்

மின்சார வாகன பேட்டரிகள்

ஜவுளி பொருள்கள்

கைப்பேசிகள் மற்றும் கையடக்கக் கணினிகள்

சூரியசக்தி தகடுகள்

கடல் உணவுகள்

விளையாட்டு உபகரணங்கள்

சுய பயன்பாட்டுக்குப் பயன்படுத்தப்படும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் குறிப்பிட்ட சில பொருள்கள் ஆகியவை விலை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்குப் கல்வி, மருத்துவச் செலவுக்காக பணம் அனுப்புதலுக்கான நடவடிக்கையில் வரி தளர்வு

விலை உயரும் பொருள்கள் :

நிலக்கரி, காஃபி மற்றும் காஃபி வழங்கும் இயந்திரங்கள்

புது செஸ் வரி விதிப்பால், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் குறிப்பிட்ட சில வகை மதுபானங்கள் மற்றும் சிகரெட்கள், பான் மசாலா, பிற புகையிலைப் பொருள்கள்

விடியோ கேம்ஸ் தயாரிப்பு பாகங்கள்

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் விலங்குகள், பறவைகள்

உரங்கள்

குடை

ஏடிஎம் இயந்திரங்கள் மற்றும் அவற்றின் உபகரணங்கள்

ஒளிபரப்புத் துறைக்கான உபகரணங்கள்


மக்கள் கருத்து

BabuFeb 3, 2026 - 05:14:52 PM | Posted IP 162.1*****

ama atm ku vari yethuga apo thana avan atha nammakita seethu vasso panuvan

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital


CSC Computer Education





Thoothukudi Business Directory