» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்களாக எல்முருகன், தமிழிசை, அண்ணாமலை நியமனம்!

வெள்ளி 30, ஜனவரி 2026 10:56:48 AM (IST)

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்களாக எல்முருகன், தமிழிசை, அண்ணாமலை, உள்ளிட்டோர்  நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாகவும், இதுதொடர்பான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில், தமிழக பாஜக சார்பில் பேரவைத் தொகுதிகளுக்கு தொடர் சுற்றுப்பயணம் செல்ல உள்ள பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 பேரவைத் தொகுதிகளுக்கு பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளராக தமிழக முன்னாள் பாஜகத் தலைவர் அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம் ஆகிய 5 பேரவைத் தொகுதிகளுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் தெற்கு, குன்னூர், கோயம்புத்தூர் தெற்கு ஆகிய தொகுதிகளுக்கு வானசி சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கும்மிடிபூண்டி, மயிலாப்பூர், நாங்குநேரி, பொள்ளாச்சி, கிளியூர் ஆகிய தொகுதிகளுக்கு தமிழிசை சௌந்திரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதுகுளத்தூர், விளவன்கோடு, திருப்பதூர், சிவகங்கை, உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகளுக்கு எச்.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எழும்பூர், ராசிபுரம், பரமத்திவேலூர் தொகுதிகளுக்கு வி.பி. துரைசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி, பரமக்குடி, மேட்டுப்பாளம், பழனி ஆகிய தொகுதிகளுக்கு பொன். ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேற்கண்ட தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளவர்கள் குறைந்தது இரண்டு முறையாவது முழுமையான சுற்றுப்பயணத்தை நடத்த வேண்டும்.ஒவ்வொரு முறை சுற்றுப் பயணத்தின் போது நாம் 24 மணி நேரம் செலவிட வேண்டும்(இரவு தங்கி வர வேண்டும்).

சமுதாய தலைவர்கள், சட்டப்பேரவை குழுக்கள், தொகுதியில் உள்ள மாவட்ட மண்டல் அணி நிர்வாகிகளுடன் சந்திப்பு, தொகுதியில் உள்ள பிரிவு நிர்வாகிகளோடு சந்திப்பு, ஒரு சக்தி கேந்திரத்திற்கு நேரடியாக சென்று ஊக்கப்படுத்துதல், ஒரு பூத்திற்கு நேரடியாக சென்று பலம் வாய்ந்த பூத் பற்றி வழிகாட்டுதல், கார்யகர்தாவோடு தனிப்பட்ட முறையில் பேசுதல், ஒவ்வொரு தொகுதி வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள், ஒருங்கிணைந்து திட்டமிட்டு பணி செய்தல், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளோடு இணைந்து செல்லுதல், தொகுதி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் செயல்படுதல்.

எல்லா நிகழ்வுகளும் ஒரு சுற்றுப்பயணத்தில் முடிக்க வேண்டும் என்று பாராமல் தொடர் சுற்றுப்பயணத்திலும், தொகுதிக்கு தகுந்தவாறு நாம் திட்டமிடலாம். இது ஒரு வழிகாட்டுதல் மட்டும் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory