» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு கல்லூரியில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை: கேன்டீன் உரிமையாளர் உட்பட 3 பேர் கைது

வெள்ளி 30, ஜனவரி 2026 10:26:17 AM (IST)

நந்தனம் அரசு கல்​லூரி​யில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்​யப்​பட்​டது தொடர்​பாக கல்​லூரி கேன்​டீன் உரிமை​யாளர், மாஸ்​டர் உட்பட 3 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்​லூரி​யில் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாணவி​கள் படித்து வரு​கின்​றனர். இந்த கல்லூரி வளாகத்​தில் கேன்​டீனும் செயல்​பட்டு வரு​கிறது. இதை முத்​துச்​செல்​வம் (48) என்​பவர் நடத்தி வரு​கிறார். இந்த கேன்​டீனில் 22 வயதுடைய இளம்பெண் ஒரு​வர், அண்​மை​யில் வேலைக்கு அமர்த்​தப்​பட்​டார். மேலும் அந்த பெண் அங்​கேயே தங்​கி​யும் இருந்தார்.

இந்த பெண்​ணின் ஏழ்மை நிலையை பயன்​படுத்தி கேன்​டீன் உரிமை​யாளர் முத்​துச்​செல்​வம், கேன்​டீன் மாஸ்​டர் குணசேகரன் (38) இவர்​களது நண்​பர் கார்த்​தி​கேயன் (56) ஆகியோர் அந்த பெண்ணை மிரட்​டி​யும், கட்​டாயப்​படுத்​தி​யும் அடிக்​கடி கேன்​டீன், கல்​லூரி வளாகத்​தில் உள்ள அறை ஆகிய​வற்​றில் பாலியல் வன்​கொடுமை செய்​த​தாக கூறப்​படு​கிறது.

இதுகுறித்து அந்த பெண் கல்​லூரி காவலா​ளி​யிடம் கண்​ணீருடன் முறை​யிட்​டுள்​ளார். இதையடுத்து சைதாப்​பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலை​யத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. அதன்​படி போலீசார் பாலியல் வன்​கொடுமை உட்பட பல்​வேறு பிரிவு​களின் கீழ் வழக்​குப் பதிந்து முத்​துச்​செல்​வம், குணசேகரன், கார்த்திகேயன் ஆகிய 3 பேரை கைது செய்து சிறை​யில் அடைத்​தனர். இந்த வழக்​கில் மேலும் 2 பேரை தேடி வரு​கின்​றனர். 

பாதிப்​புக்கு உள்​ளான பெண்​ணுக்கு தேவை​யான மருத்​துவ சிகிச்சை மற்​றும் மன நல ஆலோ​சனை வழங்​கப்​பட்டு வரு​கிறது. இதுகுறித்து போலீசார் கூறுகை​யில், "பா​திப்​புக்​குள்​ளான பெண் அரியலூர் மாவட்​டத்​தைச் சேர்ந்​தவர். இளம் வயதிலேயே திருமண​மான இவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வரு​கிறார். கேன்டீன் உரிமை​யாளர் முத்​துச்​செல்​வம் கும்​பகோணத்​தில் தனக்கு தெரிந்​தவர் மூலம் அந்த பெண்ணை ரூ.10 ஆயிரம் சம்பளத்துக்கு சென்​னைக்கு 20 நாட்​களுக்கு முன் அழைத்து வந்து பணி​யமர்த்​தி​யுள்​ளார்.

பணிக்​குச் சேர்ந்த நாள் முதல் எல்லை மீற ஆரம்​பித்​துள்​ளார். பின்னர் நண்​பரை​யும் அழைத்​து, அவர்​களும் எல்லை மீறி​யுள்​ளனர். முத்​துச்​செல்​வம் கல்​லூரி​யுட​னான நேரடி ஒப்​பந்​தத்​தின் மூலம் கேன்​டீனை கடந்த 12 ஆண்​டு​களாக நடத்தி வரு​கிறார். எனவே இவர் இது​போல் வேறு யாரிட​மாவது அத்​து​மீறலில் ஈடுபட்டாரா என விசா​ரணை நடத்தி வரு​கிறோம்” என்​றனர். கல்லூரி வளாகத்​திலேயே இளம் பெண்பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்ட சம்​பவம் சென்​னை​யில்​ அதிர்​வலைகளை ஏற்படுத்தியுள்​ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education


Arputham Hospital





Thoothukudi Business Directory