» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி நகை, செல்போன் பறிப்பு: தந்தை-மகன் கைது
வியாழன் 22, ஜனவரி 2026 8:10:07 AM (IST)
நெல்லையில் நிதி நிறுவன உரிமையாளரை மிரட்டி நகை, செல்போன் பறித்த தந்தை- மகனை போலீசார் கைது செய்தனர்.
கரூரைச் சேர்ந்தவர் சரத்குமார் (32). இவர் நெல்லை தெற்கு புறவழிச்சாலையில் குறிச்சி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இங்கு மர்மநபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் அரிவாளைக் காட்டி மிரட்டி, சரத்குமார் அணிந்திருந்த 2½ பவுன் தங்க மோதிரம், 5 செல்போன்களை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து சரத்குமார் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தங்கதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அந்த பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
போலீஸ் விசாரணையில், சரத்குமாரிடம், கடந்த 2024-ம் ஆண்டு ஆறுமுகசுந்தரம் என்பவர் மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நிதி உதவி பெற்று, இதுவரை செலுத்த வேண்டிய தொகையை திருப்பி செலுத்தவில்லை. இதையொட்டி அந்த மோட்டார் சைக்கிளை சரத்குமார் பறிமுதல் செய்து வைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகசுந்தரத்தின் நண்பரான தச்சநல்லூர் சிதம்பர நகரைச் சேர்ந்த மணிகண்டன் (25), அவருடைய தந்தை கணேசன் (60) ஆகியோர் சரத்குமார் அலுவலகத்திற்குள் புகுந்து அவதூறாக பேசி நகை, செல்போன்களை பறித்து சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக மணிகண்டன், கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியிடங்கள் : ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 3:46:07 PM (IST)

தூய்மைப் பணியாளரின் நேர்மையை பாராட்டி தங்கச் சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்..!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:40:48 PM (IST)

முதல்வர் மு.க. ஸ்டாலின் 19ம் தேதி குமரி வருகை : அரசு விழாவில் பங்கேற்கிறார்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 12:15:42 PM (IST)

பாஜக தேர்தல் சுற்றுப் பயண பொறுப்பாளர் பணியிலிருந்து அண்ணாமலை திடீர் விலகல்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 11:48:54 AM (IST)

நாகர்கோவில் மார்டன் பள்ளியில் விதைப்பந்து விழிப்புணர்வு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:49:12 AM (IST)

எத்தனை சக்திகள் வந்தாலும் தி.மு.க.வை வீழ்த்த த.வெ.க.வால் மட்டுமே முடியும்: விஜய் பேச்சு!
திங்கள் 2, பிப்ரவரி 2026 4:00:39 PM (IST)









