» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்: சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
ஞாயிறு 10, ஆகஸ்ட் 2025 5:36:45 PM (IST)
கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சநாதானத்திற்கு எதிராக சில கருத்துக்களைத் தெரிவித்ததாக அவர் மீது புகார் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சின்னத்திரை நடிகரான ரவிச்சந்திரன் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது.இந்தநிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையரை இன்று சந்தித்து புகார் அளித்துள்ளனர். அதில், கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஜி-யுமான மௌரியா, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சென்று இந்த புகாரை அளித்துள்ளார். மிரட்டல் குறித்து காவல் துறை தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா? விஜய்க்கு எதிராக பரபரப்பு போஸ்டர்!
வியாழன் 18, டிசம்பர் 2025 12:41:34 PM (IST)

விஜயை மக்கள் ஒருநாளும் கைவிடமாட்டார்கள் : ஈரோடு பிரசாரத்தில் விஜய் பேச்சு
வியாழன் 18, டிசம்பர் 2025 12:30:15 PM (IST)

தமிழகத்தில் ஏற்றுமதி வர்த்தகம் கடுமையாக பாதிப்பு : பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:54:37 AM (IST)

நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் - ஆட்சியர் தகவல்!
வியாழன் 18, டிசம்பர் 2025 10:42:55 AM (IST)

முன்புபோல் ஊழல் செய்ய முடியாது என்று கவலையா? - முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
புதன் 17, டிசம்பர் 2025 5:42:27 PM (IST)

தென்காசி நீதிமன்றத்தில் ராக்கெட் ராஜா ஆஜர்: டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிப்பு!
புதன் 17, டிசம்பர் 2025 5:32:20 PM (IST)










